உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைக் கட்டுரைகள்

79

இவர் தம்மாட்டு ஈர்ப்பவராயினர். அச்செல்வர், இவர் பல நாடுகளுஞ் சென்று காணும் வழிச்செலவிற்கு உதவியாம் பொருட்டு ஆண்டு ஒன்றிற்கு முந்நூறு பவுன் அல்லது மூவாயிர ரூபா நன் கொடையாக அளித்து வந்தனர். கல்வியிற் றேர்ந்த இளைய அடிசன் L பலநாடுகளுஞ் சென்று ஆங்காங்கு நடைபெறும் அரசியல் முறைகளையும், அங்கங்குள்ள வெவ்வேறு மக்கட் பிரிவினரின் பழக்க வழக்கங்களையும் உணரப்பெறுதலால் தமது பக்கத்தவர் வலுவெய்துதற்கு வழியுண்டாமென்பது அச் செல் வரின் நோக்கமாகும். அடிசனும் அந் நன்கொடைப் பொருளைக் கொண்டு, பிராஞ்சு, சுவிட்ஸர்லாண்டு, இட்டலி, ஜெர்மனி முதலான பல தேயங்கட்குஞ் சென்று, வாழ்க்கையின் இயல்பு களையும் அறிவு வகைகளையுந் தேர்ந்து புத்தப்புதிய ஓர் அறிவுக் களஞ்சியந் தொகுத்தார். இக்களஞ்சியத்தில் இவ்வாறு தொகுத்துவைத்த அரும்பெரும் பொருள்களையே பின்னர்த் தாம் எழுதிய பாட்டிலும் உரையிலுஞ் செலவிட்டார்.

அது செய்தற்குத் தக்கார்

மூன்றாம் உவில்லியம் என்னும் அரசர் இறந்து போன வுடன், அடிசன் என்னும் நம்புலவர் பெருந்தகையார்க்கு வழிச் செலவுக்கென்று அளிக்கப்பட்டுவந்த நன்கொடைப் பொருள் நிறுத்தப்பட்டுப் போயிற்று. அதன்மேல் அவர் கீழ்நாடுகளினின் றுந் திரும்பி, 1703 செப்டம்பரில், தமது தாய்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். அப்போதிருந்த அமைச்சர் குழாம், ப்ளென்கீம் என்னும் இடத்தில் ஆகஸ்டு, 1074 இல் தாம் அடைந்த பெரு வென்றியைச் சிறப்பித்துப்பாட விழைந்து, அது செய்யவல்லார் ஒருவரை நாடுகையில், மேற்குறித்த மாண்டேகு என்னுஞ் சல்வர் அடிசனே என்று காட்டினார். உடனே தம்பால் வந்து தம்மை வேண்டிய அவரது வேண்டுகோளுக்கு இயைந்து இவர் பாடிய ‘பாசறையிருப்பு’ (Campaign) என்னும் பாட்டு வெளிவந்தது. இப்பாட்டு மிகச் சிறந்தவல்லாவிடினும், டிரைடன் (Dryden) என்னும் பாவலர் இறந்துபட்டு வேறு நல்லிசைச் செய்யுள் இயற்றுவார் இல்லா மற் போன அந் நேரத்திற்கு ஏற்றதாய் வெளிவந்தமையின், அஃது எல்லாரானும் பெரிது கொண்டாடப்பட்டு நம்புலவர் பெருந் தகையாரான அடிசனுக்குப் பெரும்புகழை விளைத்தது. அமைச்சர்குழாம் அதனாற் பெரிதும் உவப்படைந்து, இரண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/104&oldid=1583532" இலிருந்து மீள்விக்கப்பட்டது