உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

விளக்க உரைக் குறிப்புகள்

ஜோசப் அடிசன்

.

சிந்தனைக் கட்டுரைகள் என்னும் இந்நூலில் அடங்கிய ஆறு கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதிய நல்லிசைப் புலவராகிய ஜோசப் அடிசன் (Joseph Addison) கி.பி.1672 ஆம் ஆண்டு மேத்திங்கள் முதல் நாளில், இங்கிலாந்து தேயத்துத் தென் பகுதியில் உள்ள உவில்ட் மாகாணத்தில் (Wilt Shire) மில்ஸ்டன் (Milston) என்னும் ஊரிற் பிறந்தவர். இவர்தந் தந்தையாராகிய லான்ஸ்லட் அடிசன் (Lancelot Addison) ஒரு கிறித்து சமயகுரு. ஜோசப் அடிசன் இளமைப்பொழுதிலே நாட்டுப் புறத்துப் பள்ளிக்கூடங்களிற் கல்வி பயிற்றப்பட்டுத் தமது பதினைந்தாம் ஆண்டில் ஆக்ஸ்பர்ட் (Oxford) நகரத்தில் உள்ள அரசியின் கல்லூரியிற் (Queen's College) பெருங் கல்வி பயிலப் புகுந்தார். கி.பி. 1693 இல், அக் கல்விப் பயிற்சியில் தேர்ச்சிப்பெற்றுப் பெரும் புலமைக்கு அறிகுறியான பட்டமும் பெற்றார். ஆங்கில மொழியின் மட்டுமேயன்றி இலத்தீன் மொழியிலும் இவர் துறைபோகக் கற்றவர். கல்விப் பயிற்சியில் மிக்க விழைவுள்ளவர். இவர் இயற்கையிலேயே கூச்சம் வாய்ந்தவராயும், வாய் பேசாதவராயும், எந்நேரமும் எதனையும் ஆழ்ந்து எண்ணிப்பார்க்கும் உள்ளம் உடையவராயும் இருந் தனர். இவர் கி.பி. 1697 இல், மாக்டலன் கல்லூரிப் புலவர் கூட்டத் தில் ஒருவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

6

அக்காலத்திற் பெரிய ஓர் ஆங்கிலப் பாவலராய் விளங்கிய டிரைடன் (Dryden) என்பவரோடு இவர் பழகலானார். அரசியற் பிரிவினரில் உவிக் பக்கத்தவரோடு (Whig party) இவர் சேர்ந்துகொண்டதிலிருந்து, அப்பக்கத்தவர்க்குத் தலைவரான சார்லஸ் மாண்டேகு (Charles Montague) என்பவர் கற்றார்க்கு உதவிபுரியுந் தன்மையுடையராகையால், அவரது கருத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/103&oldid=1583531" இலிருந்து மீள்விக்கப்பட்டது