உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

77

அவள் எய்திய இன்பத்தினிடையில், அவள் கணவன் அவளைப் பின்வருமாறு கடிந்து கூறுவானாயினன்; 'கிளிமொழியே, பெண்மக்கள் நம்பற்பால ரல்லர் என்னும் முது மொழியை நீ உண்மையாக்கினையே பார்! நினது குமரிப் பருவத்தில் நின்னை மணம்புரிந்துகொண்ட கணவன் யான் அல்லேனோ! நின்னால் யான் மக்களைப் பெற்றேன் அல்லேனோ! இரண்டாம் முறை ஒரு ரு மணமும், அதன் பின், வெட்கமின்றித் தன் றமையன் படுக்கையிற் களவாய் நுழைந்த ஒருவனை நின் கணவனாகக் கொண்டு மூன்றாம் முறை ஒரு மணமுஞ் செய்துகொள்ளும் வண்ணம் அவ்வளவுக்கு நீ நமது காதலை எங்ஙனம் மறந்திடக் கூடும்? என்றாலும், நமது பழைய காதலின் றிறத்தை நாடி, இப் பழியினின்றும் உன்னை விடுவித்து, உன்னை என்றும் எமக்கே உரியளாக்கிக் கொள்கின்றேன்.' கிளிமொழி இக் கனவைத் தனக்குப் பழக்கமான மகளிர் பலர்க்கும் உரைத்துப், பின் விரை வில் இறந்துபோனாள். இக்கதை இவ்விடத்திற்கு ஒவ்வாதது அன்றென எண்ணினேன்; அஃதன்றியும், உயிர்கள் என்று முள்ளனவா மென்பதூஉம், இறைவன் யாவும் முன்னுணர்ந்து நடத்துபவனாமென்பதூஉந் திண்ணமாய் மெய்ப்படுத்திக் காட்டுதற்குரிய சான்றுகள் அடங்கப் பெற்றிருத்தலால் அக்கதை ஈண்டு உற்று நோக்கற்பாலதேயாம். யாரேனும் இங் குரைத்தன நம்பற்பாலன வல்லவென்று கருதுவராயின் அவர் தமது கருத்தைத் தம்மளவே வைத்து மகிழ்க. இத்தன்மையவான நிகழ்ச்சிகளைத் தெரிதலால் நல்லொழுக்கத்திற் பயில மன வெழுச்சி தோன்றப்பெறுவாரது நம்பகத்தைச் சிதைத்தற்கு அவர் முயலாதிருக்கக் கடவராக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/102&oldid=1583530" இலிருந்து மீள்விக்கப்பட்டது