உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் 16

து

வில்லையென நிறுத்தல் வேண்டினா ராயினும், மெய்யாகவே பேய்களுண் டென்பதிலும், மக்கள் தாம் இறந்தபின் பலகால் தோன்றி யிருக்கின்றனர் என்பதிலும் ஐயமறச் சொல்லியிருக்கின்றார்; இது மிகவும் பாராட்டற் பாலதென யான் கருதுகின்றேன். அவர் தம்மால் மறுத்துக் கூறுதற் கேலாவாறு கிடந்த அவ்வுண்மையை வேறொரு வகையால் விளக்கி யுரைக்கும் படி நெருக்கப் படுவாராயினர்; அடுக்கடுக்காய் நின்ற உடம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாது பறந்து போகின்றன வென்றும், ஒன்றினொன்று நுண்ணியவான இவ் வுடம்புகள் கட்புலனாகும் இப் பருவுடம் ப் புக்குட் கட்டுப்பட்டிருக்குங்காறும் வெங்காயச் சருகு போல் ஒன்றினுள் ஒன்றாய் அடங்கியிருக்கின்றன வென்றும், அவை இதனினின்றும் பிரிந்த பின்னர்ச் சில நேரங்களில் முழுமை யாய்க் காணப்படுகின்றன வென்றும், இவ் வேதுவினாலேயே எதிரே யில்லாத அல்லது இறந்துபோன மாந்தரின் சாயலும் உருவும் நாம் பலகாற் காணும்படி தோன்றுகின்றன வென்றும் அவர் நம்மை நோக்கிக் கூறியிருக்கின்றார்.

இனி, இந்தக் கட்டுரையைப் பிறிதொரு கதைப் புத்தகத் திலிருந்து ஈண்டு எடுத்துச் சொல்லப்படும் ஒரு சிறுகதையால் முடித்துவிடுகின்றேன். அக் கதையை இங்கெடுத்து உரைப்பது கதைக்காகவன்றி, அதன் ஆசிரியன் அதன்கட் பொதிந்துவைத்த நன்னெறிக் குறிப்புகளோடு வைத்து அதனை முடித்துக் காட்டு தல் பற்றியேயாம்; அதனை அவர் தஞ்சொற்களினாலேயே ஈண்டு வரைகின்றேன்:

.

“அருக்கன் என்னும் அரசன் புதல்வியான கிளிமொழி என்பாள் தான் முதல் இரண்டுமுறை மணஞ் செய்துகொண்ட இரண்டு கணவரும் இறந்த பின்றை மூன்றாம் முறையும் ஒருவனை மணந்துகொண்டாள். இம் மூன்றாங் கணவன் இவளின் முதற்கணவனுக்குத் தம்பியாவான்; இவன் இவள் மீது அளவுகடந்த விழைவு கொண்டதனால், இவளை வதுவை யயர்தற் பொருட்டுத் தன் முதன் மனைவியையுந் துரத்தி விட்டான். அதுநிற்க, அக் கிளிமொழி மிகவும் புதுமையான தொரு கனாக் கண்டாள். தன் முதற் கணவன் தன்னை நோக்கி வருவதாகவும், அவனைத் தான் மிக்க உருக்கத்தோடுந் தழுவிக் கொள்வதாகவும் அவள் எண்ணினாள். அவனைக் காண்டலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/101&oldid=1583529" இலிருந்து மீள்விக்கப்பட்டது