உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

  • சிந்தனைக் கட்டுரைகள்

75

களுள் ஒன்றன் கதவுகள் ஆணியால் தறையப்பட்டிருந்தன என்றும், நெடுங்காலம் உயிரோடிருந்த தம் அன்னையார் தங் கணவனும், ஒரு மகனும், ஒரு மகளும் இறந்துபோன அறைகளை அரைவாசி அடைத்து வி L னர் என்றும் மிகுந்த நகைப்போடும் எனக்குப் பன்முறை சொல்லியிருக்கின்றனர். இந் நண்பர் தமது உறைவிடம் அத்துணைச் சிற்றளவினதாகக் குறுக்கப் பட்டதனையுந், தமக்குரிய வீட்டினின்றும் தாமும் புறம் படுத்தப்பட்ட தனையுங் கண்டு, தம் அன்னையார் உயிர் துறந்தவுடனே எல்லா அறைகளையும் பரக்கத் திறந்து விடும்படி கட்டளையிட்டுத், தங் குருக்கள்மாரை ஒருவர்பின் ஒருவராய் அவ் வறைகள் ஒவ் வொன்றிலும் படுக்க வைத்திருந்து பேயோட்டுவித்து, இவ் வாற்றால் தம் குடும்பத்தார்க்குள் நெடுநாள் அரசுவீற்றிருந்த அச்சம் அனைத்தையுங் கலைத்து ஓட்டினார்.

இத்தேயம் எங்கணும் நிரம்பப் பரவியிருத்தலை யான் காணாவிட்டாற் பகடி பண்ணத்தக்க இவ் வச்சத்தைச் சுட்டி ங்ஙனம் ஏதுஞ் சொல்லி யிருக்கமாட்டேன். ஆனாற், பழை யரும் புதியருங் கடவுள்நேயம் உடையரும் உடையரல்லா ருமான வரலாற்று நூலாசிரியர் எல்லாருந் தெரிப்பன வற்றோடும், எல்லாத் தேயத்தாருந் தொன்று தொட்டு வழங்கிவரும் வரலாறுகளோடும் மாறுகொண்டு பேய்களின் தோற்றத்தைப் பொய்க்கட்டென்றும் அடிப்படை அற்ற தென்றுங் கூறு

வாரைக் காட்டினும், பேய்களையும்

விகளையும் பற்றி எழூஉம் மனக்கற்பனையால் அச்சுறுத்தப் படுகின்றவர்கள் மிக்க அறிவுடையராவரென யான் எண்ணு கின்றேன். மன்பதைகள் கூறும் இப்பொதுச் சான்றுரைக்குயான் இணங்கக் கூடா தாயினும், இப்போது உயிரோடிருப்பவரும் பிற உண்மை நிகழ்ச்சிகளில் யான் நம்பாமலிருத்தற்கு இடம் பெறாதவருமான குறிப்பாளிகள் உரைப்பனவற்றிற்கு யான் இணங்க வேண்டிய வனாயிருக்கின்றேன். இன்னும் வரலாற்று நூலாசிரியர்கள் மட்டுமே யன்றிச் செந்நாப் புலவர்களும் பண்டைக் காலத்து அறிவு நூலாசிரியர்களும் இக்கருத்தில் உடன்பாடு உடைய வராக இருக்கின்றனர். உலுக்கிரீசியர் என்பாருந் தாம் எழுதிக் கொண்டுபோம் அறிவாராய்ச்சியின் போக்கால் உடம்பி ம்பினை விட்டு வேறாய் வேறாய் உயிர் நிற்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/100&oldid=1583528" இலிருந்து மீள்விக்கப்பட்டது