உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

❖ LDMMLDMOLD -16 →

தொடர்பாய்த் தோற்றுவிக்கின்ற தென்கின்றார். இதற்கு அவர் எடுத்துக்காட்டிய பலவற்றுட் பின்வருவதும் ஒன்று: “கூளி பேய் என்ற நினைவுகள் எங்ஙனம் வெளிச்சத்தோடு ஏதொரு தொடர்பும் இல்லாதனவாயிருக்கின்றனவோ, அங்ஙனமே இருளோடுந் தொடர்புடையனவாய் இருக்கின்றில; என்றாலும், ஒரு பேதைப் பெண் ஒரு சிறு பிள்ளையின் உள்ளத்தில் அவற்றை அடிக்கடி வற்புறுத்திச் சொல்லி அங்கு அவைதம்மை ஒருங்கே எழுப்புவளாயின், பின் அப்பிள்ளை பெரியவனாய்த் தான் உயிரோடிருக்கு மட்டும் திரும்ப அவையிற்றை வேறுவேறாகப் பிரிக்க எஞ்ஞான்றும் வலியற்ற வனாவான்; பிறகு இருள் தான் தோன்றும்போதெல்லாம் நடுங்கச் செய்யும் இந்நினைவு களையும் உடன்கொண்டு வரும்; அவைகள் அங்ஙனம் பிரிப்பின்றித் தோன்றுதலால் அவன் அவற்றுள் ஒன்றை விலக்கி மற்றொன்றைத் தாங்கமாட்டு வானல்லன்,” என்பதாம்.

மாலைக் காலத்து மங்கற் பொழுதானது அச்சத்தை விளைவித்தற்கேதுவான பல நிகழ்ச்சிகளோடுங் கூடித் தோன் றும் இத் தனியிடத்தில் யான் உலாவிக் கொண்டிருக் கையில், எனக்குச் சிறிது சேய்மையில் ஓர் ஆ புல் மேய்ந்து கொண்டிருக் கக் கண்டேன்; அதனைப் பார்த்தவுடன் திடுக்கிடுதற்கு இசை வான உள்ளப்பாங்கு உடையானுக்கு அஃதொரு தலையற்ற கருங்குதிரையாய்த் தோன்றுவது எளிதேயாம். அந்த ஏழை ஏவற்காரன் இத்தகைய சில புல்லிய தோற்றங்களைக் கண்டு அறிவிழந்து போனானென்றே யான் துணிவாய்ச் சொல்ல மாட்டுவேன்.

என் நண்பர் மற்றொருவர் தாந் தமது காணியாட்சிக்கு முதன்முதல் உரிமையாளராய் வந்தபின், தமது வீட்டில் முக்காற்பங்கு முற்றும் பயன்படாதிருக்கக் கண்டாரென்றும், அதில் மிகச் சிறந்த ஓர் அறை பேய் குடிகொண்டதெனப் பெயர் பெற்றதனாற் பூட்டிடப்பட்ட தென்றும், அதனது நீண்ட நடை யிற் கூக்குரலோசை கேட்பதனால் ஏவற்காரர் ஒருவரையும் அங்கு இரவில் எட்டுமணிக்குமேல் நுழைவிக்கக் கூட வில்லை என்றும், அதில் முன் சமையல் வேலை மேற்பார்ப்பவன் ஒருவன் தான் தூக்கிட்டுக்கொண்டு இறந்துபோனதாகத் தங் குடும்பத் தார்க்குள் ஒரு கதை வழங்கிவந்தமையால் தம்முடைய அறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/99&oldid=1583526" இலிருந்து மீள்விக்கப்பட்டது