உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

73

வீட்டுக்குப் போக அவ்வழியாய்ப் பொழுது சென்று வந்த பணிப்பெண் ஒருத்தி அங்கிருந்த குற்றுச் செடிகளின் இடை யிலே சரசரவென்ற ஓசை கேட்டு அக் குடத்தைக் கீழே வீழ்த்தி விட்டாள் என்றுங் கூறி வற்புறுத்தினார்.

ரண்டோர் ஆண்டுகளுக்கு முன் ஒருநாளிரவு ஒன்பதிலி ருந்து பத்துமணி வரையில் யான் இவ்விடத்தே சென்று உலாவிக் கொண்டிருந்தேன்; அப்போது யான் அவ்விடத்தின் நிலைமை யைக் கண்டு, பேய் தோன்றுதற்கு மிகவும் ஏற்றதோர் ம் உலகத்தில் இதுவேயாகும் என்று எண்ணலானேன். அக்கோட் டையின் இடிந்த தளவாடங்கள் அங்கு எல்லாப் பக்கத்துங் கீழும் மேலுமாய்ச் சிதறிக் கிடந்தன; அவற்றின்மேல் அரைப்பாகஞ் சீந்திற்கொடி படர்ந்து வெள்ளெருக்கு முளைத்திருந்தன; மசங்கல் மாலையிலன்றிப் புறத்தே போதராப் பல்வகைத் தனிப் பறவைகளும் அங்கே குடியாய் வைகின; இடிந்து பாழாய்க் கிடக் கும் பழங் கட்டிடங்களிலும், மேல்முகடு வளைந்த அவற்றின் மண்டபங் களிலும், எப்போதும் நடப்பதற்குமேற் சிறிது உரக்க அடிவைத்து நடந்து வந்தால் உடனே எதிரொலி தோன்றா நிற்கின்றது. அதே நேரத்தில் ஆலமர அரசமரங்கள் நிற்கும் வழியிற் சென்றால் அம் மரங்களின் உச்சியிலிருக்கும் அண்டங் காக்கை இடையிடையே கூவ அவ்விடம் ஓவென அமைதி யுற்றுப் பாராட்டப்படத் தக்கதாய்த் தோன்றும். இப்பொருள் களின் தோற்றமானது மன அமைதியினையும் ஆழ்ந்த கருத்தி னையும் இயற்கையாகவே விளைவிக்கின்றது; இவற்றோடு இராக்காலமுஞ் சேர்ந்து

வ்விடத்தின் வெருட்சியினை மிகுதிப்படுத்தி, அங்குள்ள ஒவ்வொரு பொருளிலும் இன்னும் அளவிறந்த திகிலினைத் தோற்றுவிக்குமானால், மனவலிமை அற்றவர்கள் அவ்விடத்திற் பேய்களையும் ஆவிகளையும் நிறைத்து விடுதல் பற்றி யான் சிறிதும் வியப்படைகின்றிலேன்.

இலாகவர் என்னும் அறிவுநூற் புலவர் நினைவுகளின் கூட்டுறவைப் பற்றித் தாம் எழுதிய இயலில் மிகப் புதியவான அறிவுரைகள் சில காட்டப் புகுந்து, அடுத்தடுத்து நேருஞ் சொற்பயிற்சியா லுண்டாகுந் தப்பெண்ணத்தின் பயனாய் ஒரு நினைவானது, இயற்கையிலே ஒன்றோடொன்று ஒவ்வாத பல நினைவுகளை உள்ளத்தின்கட் பலகா லுங் கொணர்ந்து ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/98&oldid=1583525" இலிருந்து மீள்விக்கப்பட்டது