உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

6. பேய்களும் ஆவிகளும்

அழகர் மலைக்குப் பக்கத்திலே இடிந்து பாழாய்க் கிடக்குங் கோட்டை நடுவில் ஆண்டு முதிர்ந்த சிலபல மரங்கள் நிற்கின்றன. அவை மிக உயர்ந்து வளர்ந்திருத்தலினால் அவற்றின் உச்சியில் அமர்ந்திருக்குங் காக்கையுங் அண்டங் காக்கையுங் கரைவது வேறெந்த விடத்திலிருந்தோ கரைதல் போல் அவற்றின்கீழ் வழி நடந்து செல்வார்க்குக் கேட்கும். இவ் வகையான ஒலியைக் கேட்கும்போது, தன்னாற் படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் வேண்டுவன வெல்லாந் தந்து உதவுவோனுந் திருவாசகச் செழுந் திருமுறையிற் சொல்லப்பட்ட வண்ணந் தன்னைக் கூவி அழைத்த கருங்குருவிக்கும் அருள் புரிந்தோனு மான அப் பெருமானைக் குறித்தழைக்கும் ஒருவகையான இயற்கை மந்திரவொலியே யென்று யான் அதனை நினைந்து மிக மகிழ்வது வழக்கம். பேய் பிடித்த இடம் என்று இதற்கு ஒரு கெட்டபெயர் வந்தமையால், கோயிற் குருக்களை யன்றி வேறு யாரும் இயங்குதலில்லாத இவ்விடத்தை ஏனையவற்றிலும் மிகுதியாய் விரும்புகின்றேன். (சுற்றுப்பக்கத்தூராற் சொல்லப் பட்டபடி) மேற்கூறிய ஏதுவினாலேயே கோயிற் குருக்கள் மாரும் இறைவனைத் தொழச் செல்வாருங்கூட அங்கு மாலைப் பாழுது தோன்றுதலும் அவ்விடத்திராமற் புறம்பே போய் விடுகின்றனர். இதனால் அவ்வழகர் மலைப் பக்கத்தில் எவருமே தங்குவ தில்லை. இது பற்றி என் நண்பர் ஒருவர், ஞாயிறு மறைந்தபின் என்னை அவ்விடத்திற்குத் துணிந்து போக வேண்டாம் என்ற மிகவுந் குழைந்த முகத்தொடு தடுத்து, ஓர் ஏவற்காரன், தலையில்லாத கருங்குதிரை வடிவாய்த் தன் னதிரே வந்த ஓர் ஆவியாற் கிட்டத்தட்டத் தன்னறிவை இழக்கும்படி அச்சுறுத்தப்பட்டான் என்றும், ஒரு திங்களுக்கு முன் பாற்குடம் ஒன்றனைத் தலைமேற் சுமந்து கொண்டு தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/97&oldid=1583524" இலிருந்து மீள்விக்கப்பட்டது