உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

புலனாகாதவாறு

71

திரும்பத் திருத்திக் கொண்டே யிருந்த தனாலும் ஓர் உருவின்மேற் படிந்த இணக்கமில்லாச் சிறு மினு மினுப்பு ஒவ்வொன்றனையும் துடைத்துத் தூய்தாக்கினான். இன்னும், அவன் நிழலோட்டங்களுக்கு அழகிய பழுப்புநிறம் ஊட்டியதனாலும், வண்ணங்களை ஆற்றி முதிரச் செய்ததனாலும் ஒவ்வோர் ஓவியமுந் தம்மை வரைந்த ஆசிரியர் துகிலிகையினின்று புதிதாய் வந்தக்கால் இருந்ததைக் காட்டினும் நிறைவு மிக்கு விளங்கித் தோன்றின. இங்ஙனமிருந்த இந்தப் பழைய ஓவியன் முகத்தை யான் பாராது போகக் கூடா மையால், உடனே அவனை உற்று நோக்கி அவன் முன்நெற்றியிற் றொங்கிய நீண்ட குஞ்சியினால் அவனைக் காலம் என்று தெரியலானேன்.

ம்

இங்ஙனங் கண்ட எனது கனவின் றொடர்பு முடிந்தத னாலோ பிறிதாலோ இன்னதென்று யான் சொல்லக் கூட வில்லை. மனத்தின் கற்பனையாய்த் தோன்றிய இம் முதியோனை யான் நெடுகப் பார்வையிட்ட பின் என்னை வந்து சூழ்ந்த இவ் வுறக்கம் என்னை விட்டு அகன்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/96&oldid=1583523" இலிருந்து மீள்விக்கப்பட்டது