உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் 16

கணக்கான கண்கள் என்னை உற்று நோக்குவனவாகவும் எண்ணி னேன்; ஏனெனில், என்னெதிரிற் றோன்றியவை யெல்லாம் ஆண்கள் போலவும் பெண்கள் போலவும் அங்ஙனம் உண்மை யாய்த் தோன்றவே, அவை ஓவியங்களென்பதை ஏறக்குறைய மறந்தே போனேன். இரவேல் என்பார் வரிந்த உருக்கள் ஒரு வரிசையாய் நின்றன; திஷன் என்பார் வரைந்தன மற்றொரு பக்கத்து நின்றன. குவிடோரேனி என்பார் தீட்டியவை பிறிதொருசார் நின்றன. அச் சுவரின் ஒருபுறத்தில் ஆனிபல் கராச்சி என்பவர் எழுதியனவும் வேறொரு புறத்திற் கோரெடுசோ என்பவர் வரிந்தனவும், மற்றுமொரு புறத்தில் உரூவன் என்பவர் வரைந்தனவும், நிறைந்திருந்தன. சுருங்கச் கூறுமளவில், இவ் வோவியச்சாலையின் இப்பக்கத்தை ஒப்பனை செய்தற்கு வேண்டுவன செய்யாது இறந்தொழிந்த ஓவியப் பேராசிரியர் அங்கு ஒருவருமே யிலர். இவ் வாசிரியர் பலரின் உதவியால் நிலைபேறுற்றுத் தோன்றிய மக்கள் அனைவரும் உயிரோடிருப் பது போல் உண்மையாய்

ளங்கினர்; அவர்கள் தங்கள் வடிவத் திலும், நிறத்திலும், உடையிலும் மட்டுந் தம்மிலொருவர் ஒருவரின் வேறாக வேற்றுமைப் பட்டனர்; இவ்வாற்றால் இவர்கள் ஒரு வகுப்பினுள்ளே பலதிறப்பட்ட மக்கட் டொகுப்பினர் போற் காணப்படுவாராயினர் என்க.

இனி, ஓர் ஓவியத்தினின்று மற்று ஓர் ஓவியத்திற்குப் போதலும் வருதலுமாய், எனக்கெதிரே நின்ற மிகவும் நேர்த்தி யான எல்லா ஒவியங்களையுந் தொட்டுத் திருத்திக் கொண் டிருந்த முதியோன் (ஓவியச்சாலையின் இந்தப் பக்கத்தில் ஒவியவேலை செய்து கொண்டிருந்தவன் என்று யான் முன்னரே கூறிய ஒரே ஓர் ஓவியக்காரன் இவன்தான்) ஒருவனைப் பார்த் தும், அவன் தொழில் முழுமையும் யான் நன்றாய் உன்னியாம லிருக்கக்கூடவில்லை; அவன் கையிற் பற்றியிருந்த துகிலிகை மிகவுத் நொய்தா யிருந்தமையால் அஃதெழுது வதாகவே புலனாகவில்லை; ஆயிரமுறை தொட்டுத் திருத்தியும், அவன் முயன்று கொண்டிருந்த ஓவியத்தின் கண் அது புலப்படத் தோற்றுவித்த தொன்று மில்லை. என்றாலும், அவன் ஓவாது முயன்று கொண்டிருந்த தனாலும், இளைப்பாறு தலுமின்றி இடையறாது திரும்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/95&oldid=1583522" இலிருந்து மீள்விக்கப்பட்டது