உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைக் கட்டுரைகள்

69

மற்றோர் ஓவியக்காரனும் இருத்தலைக் கண்டேன். இவனுடைய உருக்கள் வியக்கற்பாலதாம் உழைப்போடும் அமைக்கப் பட்டிருந்தன. இவன் ஓர் ஆண்மகனுருவை எழுதினால் அவன், முகத்திலுள்ள ஒரு மயிரையேனும் எழுதாமல் விடான்; ஒரு மரக்கலத்தின் உருவைத் தீட்டினாற் பாய்மரக்கயிற்றுள் ஒன்றாயினும் இவனைத் தப்பிப்போனவாறில்லை. அவ்வாறே இவன் சுவரிற் பெரும்பாகம் எங்குந் தொங்கவிட்டிருந்த இராக்கால ஓவியங்களிற் பலவிடத்துங் கொளுத்தி வைக்கப் பட்டிருந்த மெழுகுதிரிகளால் அவ்வோவியங்கள் தாமே தம்மைக் காட்டுவனபோற் றோன்றின; இம் மெழுகுதிரிகளின் மேற் பகலவன் வெளிச்சஞ் சடுதியில் விழாநிற்ப, நான் அதனை முதன் முதற் காண்டலும் ‘நெருப்பு’ என்று கத்தும்படி அவை அத்துணை ஒளி விரிந்து துலங்கின.

க்

6

இங்ஙனம் மேலெடுத்துக் கூறப்பட்ட ஓவியக்காரர் ஐவரும் இவ் வோவியச்சாலையின் இப்பக்கத்தே பெரிதும் உன்னிக் கற் பாலரா யிருந்தனர்; இன்னும் வேறு பலர் ஆங்கிருந்தனரேனும் அவரை உற்றுப் பார்க்க எனக்குப் பொழுது இலதாயிற்று. என்றாலுந் தானே தன்னறிவு கொண்டு ஏதும் எழுதா தொழியினும், மிக நேர்த்தியாய் முடித்த ஓவியங்களை மிகு முயற்சியோடு தொட்டுத் திருத்திக் கொண்டிருந்த ஒருவனை அங்கு யான் பாராமலி ருக்கக்கூடவில்லை. அவனது எழுது கோலானது முன்னமே நிறம் மிகுத்து வைத்தெழுதப்பட்ட முகத்தின் ஒவ்வோர் இயலையும் மேலும் மிகுதிசெய்து கெடுப்பதாயிற்று; ஒவ்வொரு குறையினையும் மேலுங் குறைத்துக் குறைவு படுப்பதாயிற்று; அது தான் தொட்ட ஒவ்வொரு நிறத்தினையுங் கெடுத்து நஞ்சாக்குவதுமாயிற்று. உயிரோடிருப்பவர் பக்கத்தில் வேலைக்காரன் இவ்வளவு தீச்செயல் புரிந்தனனாயினும், இறந்தோர் பக்கத்தில் இவன் தன் கண்களைத் திருப்பியதே யில்லை. இவன் பெயர் அழுக்காறு எனப்படுவதாம்.

வ்

இங்ஙனம் இவ் வோவியச்சாலையின் ஒரு பக்கத்தைப் பரும்படியாய் விரைந்து நோக்கியபின், இறந்து போன ஓவியப் பேராசிரியர் வரைந்த ஓவியங்கள் நிறைக்கப்பட்ட மற்றொரு பக்கத்திற்குத் திரும்பினேன். திரும்புதலும், உடனே, என்னைப் பார்ப்பவர் குழுவினெதிரே யான் நிற்பதாகவும், ஆயிரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/94&oldid=1583521" இலிருந்து மீள்விக்கப்பட்டது