உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

❖ LDMMLDMOLD -16 →

ஒவ்வொரு பகுதியும் அங்குமிங்குமாய் அலைந்து ஏனைய வற்றினுந் தம்மையே சிறந்தெடுத்துக் காட்ட முயன்றன.

தற்பெருமை என்பவனுக்கு இடதுகைப்பக்கத்தே பேரு ழைப்பாளியான ஓவிய வேலைக்காரன் ஒருவன் நின்றுகொண்டு, அவனைப் பெரிதும் வியப்போனாய் அவன் எழுதியவற்றைப் பார்த்துப் படி எழுதக் கண்டேன். இவன் கேட்பதற்குக் கடுமையான மடையன் என்னும் பெயரு டையனாய் யர்மன் தேயத்தானைப் போல் உடை பூண்டிருந்தான்.

அதன்பின் யான் கண்ட மூன்றாம் ஓவியக்காரன் பெயர் வீண் எண்ணம் என்பதாம். இவன் வெனிசு தேயத்துக் கோமாளிபோல் உடையிட்டிருந்தான். இவன் வீண் கற்பனை செய் தெழுதுதலிற் கைதேர்ந்த வனாயிருந்ததனால் முகநெளிவு சுளிவுகளையே மிகுதியும் வரைந்திட்டான். தனது துகிலிகையாற் றான் எழுதிய மாய உருக்களைக் கண்டு தானே சில நேரங்களில் அவன் வெருக்கொள்ளுதலும் உண்டு. சுருங்கச் சொல்லு மிடத்து, அவன் வரைந்தவற்றுள் மிக விரித்தெழுதப் பட்ட ஓவியமானது அச்சமுறுத்துகின்ற ஒரு கனவின் றோற்றமேயாம்: இவன் மிக நேர்த்தியாய் வரைந்திட்ட உருக்களும் மனத்திற்கேற்ற கொடிய வடிவங்களே யல்லாமல் வேறு மேலாகச் சொல்லக் கூடியனவா யில்லை என்க.

அதன்பின் யான் தெரிந்தா ராய்ந்த நான்காம் ஓவியக் காரன் மிகவும் விரைவாய் எழுதுவதிற் பெயர் பெற்றிருந்தமை யால், அவன் பின்வருவார்க்கு நினைவுக்குறியாய் வைத்தற் பொருட்டுக் கோலிய ஓவியத்தின் உருவழகானது அவ் வுருவுக்கு முதலாய் நின்றோனது அழகு நிற்கும் நாளளவுகூட நில்லாது விரைந்து மங்கும் வகையாய், முற்றும் எழுதி முடியாமல் விடப்பட்டது. தனது துகிலிகையைத் துப்புரவு செய்தற் கேனும், வண்ணங்களைக் கலந்து குழைத்தற்கேனுங் காலம் பெறாதவாறு தானெடுத்த வேலையை முடித்திட அவன் அவ்வளவு துடிதுடித் தான். அத் துடிதுடிப்புக்காரன் பெயர் பேரவா என்பதாம்.

இவனுக்கு அருகாமையில், இவனொடு முற்றும் வேறு பட்ட இயல்புடையவனும், உலாந்தாக்காரன் போல் உடை யணிந்தவனும், உழைப்பு என்னும் பெயருடையவனுமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/93&oldid=1583520" இலிருந்து மீள்விக்கப்பட்டது