உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

67

கற்பனை முழுதும் அவற்றின் வழிப்பட்டு நிற்க, இங்ஙனம் நின்ற நிலையில் ஒரு நாட் காலையில் யான் கண்ட ஒரு சிறு கனாவின் தோற்றத்தை முடியக் கூறாவிடினும், அதன் முதன்மையான குறிப்புகளை இதனைப் பயில்வார்க்கு அறிவிக்கப் புகுகின்றேன்.

இ மகன்று நீண்டதோர் ஓவியக் கூடத்தினுள் யான் நுழைந்ததாகக் கனவு கண்டேன்; அதன் ஒரு பக்கத்தில் உயிரோடிருக்கும் புகழ்பெற்ற ஓவியக்காரரால் எழுதப்பட்ட ஓவியங்கள் நிறைக்கப் பட்டிருந்தன; அதன் மற்றொரு பக்கத்தில் இறந்துபோன ஓவியப் பேராசிரியர் வரைந்த ஓவியங்கள் நிரல்பட வைக்கப் பட்டிருந்தன. வைக்கப்பட்டிருந்தன.

உயிரோடிருப்பவர் பக்கத்திற் பலர் வரைதலும் வண்ணந் தீட்டுதலுங், கோலுதலுஞ் செய்து கொண்டிருப்பக் கண்டேன்; இறந்துபோன ஓவியக்காரர் பக்கத்தில், மிக மெதுவாய் வரைதலொடு நிரம்பவும் நேர்த்தியாய்த் தொட்டுத் திருத்திக் காண்டிருந்த ஒருவரைத் தவிர வேறு எவரும் அங்கு ஓவியத் தொழில் புரிவதை யான் காணக்கூடவில்லை.

எனக்கெதிரே நின்ற ஓவியம் வல்லார் பலரையும் ஆராய் ந்து தெரிதற்குத் தீர்மானித்து, முதலில் உயிரோடிருப்பவர் பக்கத்துக்குத் திரும்பினேன். இவ்வோவியச் சாலையின் இப் பக்கத்தே யான் முதலிற் கண்ட ஓவியக்காரன் பெயர் தற் பெருமை என்பதாம்; இவன் தன் தலைமயிரைப் பின்னே ஒரு நூனாழியாற் பிணித்துப் பிரஞ்சு தேயத்து ஆடவனைப்போல் உடை உடுத்திருந்தான். ஆண், பெண் என்னும் வேறுபாடும் அகவை வேற்றுமையுங் கருதாமல், தான் வரைந்த முகங்கள் எல்லா வற்றிலும் புன்முறுவலும் ஒருவகையான நகைக்குறியும் மிகச் சிறந்து தோன்றுமாறு அமைத்தான். அவன் எழுதிய நடுநிலை யாளர், சமயகுரவர், சூழ்ச்சித் துணைவர் முகங்களிலுங் கூட எக்களிப்புத் தோன்றியது. சுருங்கச் சொல்லுங்கால் அவன் வரைந்த ஆண்பால ரெல்லாம் வீண்பிலுக்கு உடையராயும், பெண் பாலரெல்லாம் வீண் பசப்புக்காரிகளாயுங் காணப் பட்டனர். அவனுடைய உருக்களின் மேல் இட்டிருந்த தொங்கல் ஆடைகள் அந்த முகங்களுக்குப் பெரிதும் ஏற்றனவாகவே யிருந்தன; அத் தொங்கல்கள் பகட்டான வண்ணங்கள் எல்லாம் ஒருங்கு குழைத்து எழுதப்பட்டனவா யிருந்தன; அவ் வாடை களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/92&oldid=1583519" இலிருந்து மீள்விக்கப்பட்டது