உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

5. முருகவேள்

கனவிற் கண்ட ஓவியச்சாலை

று

யான் வெளியே சென்று பொழுது போக்குதற்குப் பகற்கால நிலை என்னைத் தடைசெய்வதாயிருந்தால், எனக்கு உரிய நண்பரில் இரண்டொருவரைத் தெரிந்தழைத்துக் கொண்டு, ஒரு கட்டிடத்தினுட் புதுமையாய் வைக்கப் பட்டிருக்கும் பொருள்களைப் பார்க்கப் போவது வழக்கம். ஓவியங்கள் அல்லது சித்திரப் படங்களைக் காண்டலே எனக்கு முதன்மையான இன்பத்தைத் தருவதாகும்; பகற்பொழுதிற் கெட்ட ஊதைக் காற்று வீசத் துவங்கினால், நாள் முழுதும் நடந்து சென்றேனுங் கைதேர்ந்த சிறந்த ஓவியக்காரர் தங் கைகளால் தீட்டிய ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஓவியச்சாலை காணப்போவேன். வானிற் கரிய முகில்கள் நிறைந்து, நிலமெல்லாம் மழைப்பெருக்கில் நீந்துவது போற் றோன்றி, எங்கும் மப்பும் மங்கலுமாய்க் கருகிக் காணும் பொழுது, ஆறுதல் பயவா அத்தோற்றங்களைக் காணும் விருப்ப மற்று ஒழிந்து, ஓவியத் தொழிலால் தோற்றுவிக்கப் பட்ட கற்பனையுலகினை நோக்கச் செல்வேன்; அங்ஙனஞ் செல்வுழி, மகிழ்பயவாக் கார் காலத்தில் உண்டாகுந் துயர உணர்வைக் கலைத்து ஓட்டிக், களிப்பான நினைவுகளால் உள்ளத்தை நிரப்பும் ஒளி துலங்கும் நிலக்காட்சிகளையும், மினுக்கிட்டு விளங்கும் வெற்றித் தோற்றங்களையும், அழகிய முகங்களையும், பிறபொருள்களையும் அவ் வோவியச் சாலையிற் காண்பேன்.

சில கிழமைகளுக்கு முன் யான் இத்தகைய காட்சி களிலேயே அடுத்தடுத்து ஈடுபட்டிருந்தமையால் என் மனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/91&oldid=1583518" இலிருந்து மீள்விக்கப்பட்டது