உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

65

பிறகு, இறந்தபின் தீயோர் தமக்கு உறைவிடமான இருளுல கங்களையும், அவ் வமெரிக்க தேயத்துக் குடி மக்களிடத்துள்ள பொற்றிரளைக் கவரும் பொருட்டு அவர் தம்மிற் பல்லாயிர வகைக் கத்திக்கு இரையாக்கின நாகரிக மில்லாக் கொடிய ஐரோப்பியரின் உயிர்கள் அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பொன் னுருகு கடல்கள் பலவற்றையுங் கண்டனன் என்று அக் கதை மேலுஞ் சில கூறிச் செல்கின்றது. ஆயினும், அக் கதையின் முதன்மையான குறிப்புகளைத் தொட்டுக்காட்டி, இக் கட்டுரை யின் அளவைக் கடந்து சென்றோமாகையால் இன்னுமிதனை விரித்துரையாது விடுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/90&oldid=1583517" இலிருந்து மீள்விக்கப்பட்டது