உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைக் கட்டுரைகள்

81

1707 இல் அடிசன் ‘ரோஸமண்ட்' (Rosamond) என்னும் சை தழுவிய நாடகம் ஒன்றை இயற்றி வெளியிட்டார். அஃது இசைப்பாட்டுகள் மிகவிரவிப் பயில்வார்க்குப் பெரிதும் இனிமை பயப்பதொன் றேயாயினும், பகடியைத் தரும் இடங்களி லன்றி அடக்க ஒடுக்கமான பகுதிகளில் மிகச் சிறந்ததென்று சொல்வதற்கு வாயாதது. இவ்வாண்டிலேயே ‘ட்ரம்மர்’ (Drummer) என்னும் முடிபினிய நாடகம் (Comedy) ஒன்றும் இவரால் இயற்றி வைக்கப்பட்டது; ஆனால், அஃது இவர் இறந்த பின்னர்த்தான் இவர்தம் ஆருயிர் நண்பரான 'ஸ்டீல்' (Steele) என்பவரால் வெளியிடப்பட்டது; கதைப் போக்கிலும், மனக்கவர்ச்சியை எழுப்பும் வகையிலும் இது குறைபாடுடைய தாகக் காணப்படினும், இதன் பல பகுதிகளும் நகைச்சுவை விளைத்துக் கற்போர் உள்ளத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி தருவன வாய் அமைந்திருக்கின்றன.

நி

இனி, இவர் வெளியிட்ட இந்நூல்களைவிட இவர்க்கு நிலையான பெரும்புகழைத்தந்து, ஆங்கிலமக்களையே யல்லாமல் உலகத்தின்கண் இவருடைய நூல்களைக் கற்பா ரெல்லாரையுஞ் சீர்திருத்தி, அவர்கட்கெல்லாம் பல துறை களிலும் நல்லறி வையும் இன்பத்தையும் ஊட்டிப் பெரிதும் பயன்படுவனவான உரைநடைக் கட்டுரைகள் எழுதவேண்டும் அமயம் இவர்க்கு இக்காலத்தே வந்து கைகூடிற்று. இளந்தைப் பாழுதில் தில் ஒரு பள்ளிக்கூடத்தில் இவரோடு ஒருங்கு கல்வி பயின்ற ஸ்டீல் என்னும் புலவர், 1709 இல் 'டாட்லர்' (Tatler) எனப் பெரிய ஒரு புதினத்தாளை வெளியிடலாயினர். அஃது ஒரு கிழமைக்கு மூன்று முறை வெளியிடப்பட்டது. அது வெளியிடப் பட்டதன் நோக்கம் : அக்காலத்து ஆங்கில மக்களின் நடையுடை எண்ணங்களைச் சீர்திருத்துதலேயாம். அந்நாட்களில் இருந்த ஆங்கில மக்களிற் செல்வர்களும் நடுத்தரநிலையி லுள்ளாருங் கல்விச் சுவையை அறியாதவர்கள். அவர்கள் தமது பாழுது போக்கிற்காக மேற்கொள்ளுங் கொண்டாட்டுக ளெல்லாம் புல்லியவைகள்; அல்லாக்கால் தீய ஒழுக்கம் நிறைந்தனவும் விலங்கின் செய்கைகளோடு ஒப்பனவுமாம். பெண் பாலாரிலுங் கூடச் சூதாட்டம் மிகப் பரவியிருந்தது. ஆண்பாலர் மேற் கொள்ளும் விளையாட்டுகளோ இரக்கமற்றனவாய்க் கொடுந் தன்மை வாய்ந்தனவா யிருந்தன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/106&oldid=1583534" இலிருந்து மீள்விக்கப்பட்டது