உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

  • மறைமலையம் -16

அவர்கள் சாராயக் குடியிலும் மட்டுக்கு மிஞ்சி இறங்கி விட்டனர். இத்தகைய நிலைமையிற் கல்வித் தேர்ச்சியும் அதனால் விளையும் இன்பங்களும் அவர்கட்குப் புதுமையாகவும் இகழ்ச்சியாகவும் தோன்றின. இவ்வளவு சீர்கேடுகளையும் போக்கி அவர்களைச் சீர்படுத்தல் வேண்டுமென்பதே ஸ்டீல் என்னும் புலவரின் உயர்ந்த நோக்கம். கைக்கும் மருந்து உண்ணமாட்டார்க்கு அதனை உள்ளபடியே வைத்து உட்செலுத்துதல் ஆகாதவாறுபோல், நிரம்பச் சீர் கெட்ட நிலைமையிலுள்ள அவர்கட்கு ஒழுக்கத்தின் மேன்மை களையுங் கல்வியின் சிறப்புகளையும் நேரே உணர்த்தப் புகுந்தால், அவர்கள் அவற்றை ஒரு சிறிதுங் கேளார். ஆகவே, கைக்கும் மருந்தை இனிய அக்காரந் தீற்றி அருத்துதல்போல, அழகிய இனிய உரைநடையில் நகைச்சுவை தோன்ற ஏற்கும் வகையால் எளிய நல்ஒழுக்க முறைகளைச் சிறிது சிறிதாக நல்லுணர்வும் இன்பமும் வாய்ப்ப எழுதிக் கற்பித்தலே செயற்பாலதாகும்; இதனை நன்குணர்ந்த ஸ்டீல் என்னும் புலவர் அப்புதினத்தாளில் எழில் கனிந்த சிறு சிறு கட்டுரைகள் வரைந்து வரலாயினர். தம் நண்பர் தோற்றுவித்து நடத்தும் அப்புதினத் தாளை, அப்போது ஐர்லாந்தில் அரசியல் அலுவலில் அமர்ந்திருந்த அடிசனார் கண்டவுடனே, அதற்குத் தாமும் அரியபெரிய கட்டுரைகள் எழுதிவிடலானார். ஸ்டீல் என்னும் புலவர் எழுதிய கட்டுரைகளைப் பார்க்கினும், அடிசனார் எழுதியவைகளே வனப்பின் மிக்கனவாய் எல்லார் உள்ளங்களையும் எளிதிற் கவர்ந்தன. ஸ்டீல் என்பவரே, அடிசன் உரைவளங்கள் தம்முடைய உரைவளங்களினுஞ் சிறந்தன வாதலை ஒப்புக்கொண்டு, இனித்தாம் அவரது உதவியின்றி அதனை நடாத்துதல் இயலாதென்றுங் கூறினார். இப் புதினத்தாள் ஓராண்டும் ஒன்பது திங்களும் நடைபெற்றது. இதன்கண் வெளிவந்த மொத்தம் 271 கட்டுரைகளில் ஸ்டீல் என்பவரால் எழுதப்பட்டவை 188; அடிசனால் எழுதப் பட்டவை 42. அந்நாட்களில் இருந்த தேநீர் காப்பிநீர் விடுதி களில் நிகழ்ந்தன வெல்லாம் அதன்கண் விடாமல் எழுதப் பட்டன. நகரத்திலுள்ள மாந்தர்களின் வாழ்க்கையின் இயல்பு களெல்லாம் அதன்கண் நன்கெடுத்துப் பேசப்பட்ட இன்னோரன்ன நிகழ்ச்சிகள் புல்லியவைகளே யாயினும், இவற்றின்கண் உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டி,

ன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/107&oldid=1583535" இலிருந்து மீள்விக்கப்பட்டது