உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைக் கட்டுரைகள்

83

இவற்றைச் சீர்திருத்து முறைகளையும் பதமாக இனிது விளக்கி யெழுதினமையால், இத்தாள் அஞ்ஞான் றுள்ளார் கருத்தைத் தன் மாட்டு ஈர்த்து எங்கும் புகழ் பெற்றுலவியது.

அஞ்ஞான்று ஸ்டீல் என்பவர் அரசியலிற் பெரியதோர் அலுவலில் அமரும் பொருட்டுத், தாம் அரசியலுக்கு மாறாய் ஏதும் எழுதுவதில்லையென்று சொல்லுறுதி கொடுத்தமை யால் அரசியல் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது வெளியிட்டு வந்த தமது ‘டாட்லா’ என்னும் புதினத்தாளை நிறுத்தி விட்டு, 1711 ஆம் ம் ஆண்டு மார்ச்சு திங்கள் முதல்நாளில் 'ஸ்பெக்டேடர்’ (Spectator) என்னும் புதினத்தாள் மற்றொன்றைத் துவங்கி வெளியிடலானார். இஃது இலக்கியப் பகுதிகளையும், நூற்சுவை வகைகளையும், வாழ்க்கையி னியல்புகளையுமே சிறந்தெடுத்துப் பேசியதாகும். அரசியன் முறைகள் இதன்கண் அறவே ஒழிக்கப் பட்டன. இப்புதினத்தாள் எங்கும் கொண்டாடப்பட்டு, எல்லா ரானும் ஆவலோடு வாங்கிப் பார்க்கப்படுவதாயிற்று, ஆங்கில மொழியில் நிகரற்ற நல்லிசைப் புலவரான ‘மில்டன்' (Milton) என்பவரால் இயற்றப்பட்ட 'துறக்க இழப்பு' (Paradise Lost) என்னும் அரும்பெருங் காப்பியத்தின் திட்ப நுட்பங்களுஞ் சொற்சுவை பொருட்சுவைகளும் நன்கு ஆராய்ந்த கட்டுரைகள் நம்புலவர் பெருந்தகையான அடிசனால் இதன் கண் ஒரு தொடர்பாக எழுதப்பட்ன. அக்காப்பியத்தின் விழுப்பங்க ளையும் அவற்றை ஆராய்ந்து தெளியும் முறை களையும் ஆங்கில மக்கள் அப்போதுதான் முதன்முதலுணர்ந்து களிப்புற லானார்கள். 'ஸர் ரோஜர்டேகவர்லி' எனப் பெயரிய ஒருசிறு புதுக் கதையும் மிக அழகாக இவரால் இதில் வரால் இதில் எழுதப்பட்டது. இக் கதையின் தலைவனது இயற்கையை நகைச்சுவைதோன்றக் காட்டி, அதன் வளர்ச்சியினை நெடுகப்புனைந்து அழகு படுத்தும் இவரது பெருந் திறங், கதை நூல் எழுதிய வேறுயர்ந்த ஆங்கிலப் புலவரிடத்துங் காண்பது அரிது. அரிது. இன்னும் ‘மிர்ஸாவின் காட்சி’ (முருகவேள் கண்ட காட்சி) ‘படைப்பின் வியத்தகு தோற்றங்கள்' போல் அமைதியும் உருக்கமுங் கடவுள் நேயமுங் கெழுமிய உயர்ந்த அறிவுரைகளும், பகடியும் விளையாட்டும் நிறைந்த ஆராய்ச்சியுரைகளும், 'பாவைக் கூத்து,’ ‘நாடக அரங்கு’ ‘பெண் மக்களின் நடையுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/108&oldid=1583536" இலிருந்து மீள்விக்கப்பட்டது