உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

85

என்றும் மங்காமல் நின்று ஒளிரும் மணிவிளக்குப் போல்வன, இவர் வர் ‘ஸ் ‘ஸ்பெக்டேடரில்' (Spectator) எழுதிய விழுமிய கட்டுரைகளேயாமென்று உணர்ந்து கொள்க.

இவர் தமது நாற்பத்து நான்காம் ஆண்டில், அஃதாவது 1716 இல் உவார்விக் மாகாணச் சிற்றரசியை மணந்து கொண் L டனர். இவள் முதலில் அம் மாகாணச் சிற்றரசனை மணந்து அவன் இறந்த பின் தனியே அரச வாழ்க்கையிற் செருக்குற்று இருந்தவள். இவள் தன் புதல்வற்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரிய ராய் அடிசனாரை முன் ஒருகால் அமர்த்தியதிலிருந்து, இவட்கும் அவர்க்கும் நேயம் உண்டாக, அதனால் அவளை இவர் வதுவை அயர்ந்தனர். ஏழையெளிய மக்களோடு பழகி அவர்தம் இயற்கை வாழ்க்கையில் மனம் பற்றி நின்ற அடிசனார்க்குத், தற்செருக்கு மிக்க அரண்மனை வாழ்க்கை பிடியாதாயிற்று. எனவே, இவரும் இவர் தம் மனைவியாரும் மனமொத்த மாத்த இன்பவாழ்வில் வாழ்ந்தில ரென்றுணரல் வேண்டும்.

ஆங்கில மொழியினையும் ஆங்கில மக்களையும் மிகச் சீர்திருத்தி மேனிலைக்குக் கொணர்ந்த நல்லிசைப் புலவரும், இனிய இயல்பும் இனிய செய்கையும் வாய்ந்து உல்லாரானுங் காண்ட ாடப்பட்டுப் பெரும்புகழ் மிக்கவரும், தம்முடைய நூல்களைக் கற்பார் எல்லார்க்கும் உணர்வையும் உருக்கத் தையும் மகிழ்ச்சியையும் விளைத்து அவருள்ளத்தைப் புனிதப் படுத்தியவரும் ஆன அடிசனார் 1719 இல் தமது நாற்பத்தேழாம் அகவையில் மிக அமைதியாக இம் ம் மண்ணுலக வாழ்வு துறந்தார்.

ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/110&oldid=1583538" இலிருந்து மீள்விக்கப்பட்டது