உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

முருகவேள் கண்டகாட்சி

நல்லிசை புலமை மலிந்த அடிசன் என்பார் ஆங்கிலத்தில் எழுதிய ‘மிர்ஸாவின் காட்சி' (The Vision of Mirza) என்னுங் கட்டுரையினைத் தமிழில் மொழிபெயர்த்துரைப்பான் புகுந்த மறைமலைடிகள், அவ்வாங்கில வுரையிலுள்ள குறியீடுகளை அங்குள்ளவாறே யெடுத்துத் தமிழின்கண் உரைப்பின், அது தமிழ்ச் சுவைக்கு ஒவ்வாமை கண்டு, அவ்வுரைப் பொருளை ‘மிர்ஸா’ என்பவர் மேல் ஏற்றாமல், அவர் கண்ட அக்காட்சி யைத் தாம் கண்டதாக வைத்துத், தம் மேல் ஏற்றுதற்கு முனைந்து முதல் ஐந்து பக்கங்களில் தமது வரலாறு கூறுகின்றார். இது புனைந்துரை வழக்கு. மறைமலையடிகள் தாம் இளைஞராயி ருந்தபோது, “திராவிட மந்திரி,’ ‘நாகை நீல லோசினி,’ ‘பாஸ்கர ஞானோதயம், ‘இந்துமதாபிமானி' முதலான புதினத் தாள்கட்குக் கட்டுரைகள் எழுதிவருகையில், அக் கட்டுரைகளின் கீழ்த் தமது இயற்பெயரைக் குறியாமல், முருகவேள்' என்னும் புனைவுபெயரையே குறித்து வந்தமை யின், ஈண்டும் அஞ்ஞான்று நிகழ்ந்த நிகழ்ச்சியை அப் பெயர் காண்டே குறிப்பிடலானர்.

முதல் ஐந்து பக்கங்கள் முடிய மறைமலையடிகள் தாம் சிற்றூரில் சென்றிருந்ததையும், அங்கே நிகழ்ந்த சில நிகழ்ச்சி களையும், அவ்வூர்ப் புறக்காட்சிகளையும் எடுத்துரைக்கின்றார். ஆறாம் பக்கத்தின் முதற் பிரிவு முதல் அவர் அடிசனார் வரைந்த கட்டுரையை மொழி பெயர்த்து, மேற்கோட் குறிகளுள் வைத்துரைத்தல் காண்க.

மறைமலையடிகள் சிற்றூருக்குச் சென்ற வரையில் அவரது வரலாறு :

1876 ஆம் ஆண்டு, சூலைத்திங்கள் 15 ஆம் நாளில் மறைமலையடிகள் நாகப்பட்டினத்திற் பிறந்தவர். இவர் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/111&oldid=1583539" இலிருந்து மீள்விக்கப்பட்டது