உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

  • சிந்தனைக் கட்டுரைகள்

87

தந்தையார் சோழியச் சைவ வேளாளக் குலத் தவைராய்த் தோன்றி, நாகப்பட்டினத்திற்கு இரண்டு கல் தொலைவிலுள்ள காடம்பாடியிற் பெருஞ் செல்வராய் வாழ்ந்த சொக்கநாத பிள்ளை என்பவரேயாம்; இவர் தம் அன்னையார் பெயர் சின்னம்மை. இவர் பிள்ளை மைப் பொழுதிலே நாகப் பட்டினத் தின்கண் இருந்த உவெஸ்லியன் மிஷன் கல்லூரியில் (Wesley an Mission College) கல்வி பயிற்றப்பட்டு வருகையில் ஆங்கிலந் தமிழ் என்னும் இருமொழிகளையும் விரும்பிக் கற்று அவற்றில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரித் தலைமையாசிரியராற் பல பரிசுகளும் அளிக்கப்பெற்று வந்தார். இவர்க்குப் பதினாறாம் ஆண்டு நடக்கையில் தமிழ்மொழி கற்கும் அவா இவரது உள்ளத்தில் அளவு கடந்து எழ, அவ் வவாவினை நிரப்புதற் பொருட்டு, அக்காலையில் நாகப்பட்டினத்திற் புத்தகக்கடைவைத்துக் கொண்டிருந்த இயற்றமிழாசிரியர் திரு. ெ வ. நாராயணசாமிப் பிள்ளையவர்களை யடைந்து, அவர்கள்பாற் செந்தமிழிலக்கண இலக்கியங்களைச் செவ்வனே ஓதி வரலா னார். நாளேற நாளேறத் தமிழ்மொழிச் சுவை வரது உள்ளத் தைப் பெரிதுங் கவர்ந்தது. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மிக உயர்ந்த நூல்களைக் கற்பதில் இவர்க்கு விழைவு மிகுந்து வந்தமையிற், கல்லூரியிற் கற்பிக்கப்பட்டு வந்த சிறு நூற் பயிற்சி இவரது கருத்துக்கு இசையாதாயிற்று. பதினாறாம் ஆண்டு நடக்கையில், தம்மோடு உடன்பயிலும் மாணாக்கர்க்குத் தமிழறிவுந் தமது சமயவுணர்வும் பெருகல் வேண்டி ‘இந்து மதாபிமான சங்கம்' எனப் பெயரிய ஒரு கழகம் புதிதாக நாட்டி அதனை மிகுந்த ஊக்கத்துடன் நடத்தி வந்தார்.பதினேழாம் ஆண்டிற் சவுந்தரவல்லி எனப் பெயரிய நங்கையார் இவர்க்கு மனைவியராக மணம் பொருத்தப் பட்டார். பதினெட்டாம் ஆண்டிற் 'சிந்தாமணி' எனப் பெயரிய ஒரு பெண் மகவும் இவர்க்குப் பிறந்தது. இவர் சிறு பிள்ளை யாயிருந்த காலத்திலேயே தந்தையை இழந்தமையின், தம் அன்னையின் பாதுகாவலிலேயே இருந்து கல்வி பயின்றனர். கல்லூரியின் ஆசிரியர்களும் இவரோடு உடன் பயின்ற மாணாக்கர்களும் இவர் தங் கல்வியறிவின் திறத்தையுங் கூரிய அறிவையுங் கண்டு மிக வியந்து இவர்பால் மிக்க அன்பு பாராட் டினர். அஞ்ஞான்று காரைக்காலில் நடைபெற்ற 'திராவிட மந்திரி' என்னுங் கிழமைத் தாளுக்கு இவர் முதன்முதற் செந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/112&oldid=1583540" இலிருந்து மீள்விக்கப்பட்டது