உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

.

❖ LDMMLDMOшLD -16 →

அதனை அறவே கை விட்டுச், சைவ சித்தாந்த வுண்மைக்கே உழைக்குங் கடப்பாடு மேற்கொண்டு அதன் கண் விருப்பம் மீதூரப் பெற்றார். அவ்வாண்டில் நாகையில் நடைபெற்ற 6 ஸஜ்ஜனப்பத்திரிகா' என்னுங் கிழமைத்தாள் ஒன்றில் மாயாவாதி ஒருவர், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் எழுதிய சிலவற்றை மறுத்து எழுதிவந்தார். அம்மறுப்பினைக் கண்ட மறைமலையடிகள், நாயகரவர்கள் எழுதியவைகளே பொருத்தமுடையன வாதலும், அம் மாயாவாதி எழுதியவை பொருத்தமிலவாதலும் நன்கெடுத்துக்காட்டி, ‘நாகை நீல லோசனி'யில் தொடர்பாகப் பல கட்டுரைகள் வரைந்து, முருகவேள்’ என்று கைச்சாத்திட்டு வெளியிட்டார். அக்கட்டுரைகளை நோக்கினா ரெல்லாம் அவைதம்மை வரைந்த இவர்தம் ஆராய்ச்சி யறிவின் ய திறத்தையுங்

கல்வியறிவின் ஆழத்தையுங் கட்டுரை எழுதும் ஆற்றலையும் மிகுதியும் வியந்து கொண்டாடினர். இக் கட்டுரைகளைச் சென்னையிலிருந்த நாயகரவர்கள் பார்க்க நேர்ந்த போது அவற்றின் திறத்தை வியந்து அவற்றை வரைந்த ‘முருகவேள் என்பார் யார்? என்று நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையார்க்கு ஒரு கடிதம் எழுதிக்கேட்டனர். அச்சபையாருட் பெருமுயற்சி யுடையவரும், மறைமலை யடிகட்கு இளமைதொட்டுச் சிறந்த நண்பருமான திரு. மதுரை நாயகம்பிள்ளை யென்பவர், அடிகளின் வரலாறுகளை நாயகர வர்கட்கு உடனே எழுதித் தெரிவித்தனர். நாயகரவர்களும் அடிகளைப் பார்க்கும் விருப்பம்மிக்குத் தாம் அடுத்து நாகைக்கு வருகையில், இவரைத் தம்பால் அழைத்து வரும்படி அவர்க்கு அறிவித்தார். அறிவித்த சில திங்களிலெல்லாம் நாயகரவர்கள் வெளிப்பாளையம் வர, இவரும் அவரைச் சென்று கண்டார். நாயகரவர்கள் இவரை யாராய்ந்து பார்த்து இவரைத் தம் புதல்வர்போற் கருதி அன்பு பாராட்டி வரலானார். நாயகரவர்கள் சென்னைக்குத் திரும்புங் காலையில், “உன்னை விரைவிற் சென்னைக்கு வருவிப்போம்! நீ அந்தப் பக்கங் களில் இருந்தாற்றான் நலமுண்டாம்” என்று இவரை நோக்கிக் கூறிச்சென்றார்கள். அவர்கள் அங்கே சென்றபின் இவர்க்கு அன்பான கடிதங்கள் எழுதிவர, இவரும் அவரைத் தம் ஆசிரியருந் தந்தையும்போல் எண்ணி அவர்பால் மிகுந்த அன்பு பூண்டு கடிதங்கள் எழுதி வரலானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/115&oldid=1583543" இலிருந்து மீள்விக்கப்பட்டது