உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

89

திரும்பவும் 1896 ஆம் ஆண்டில் சுந்தரம்பிள்ளை யவர்கள் இவரைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்து அப்போது மார்த்தாண்டன் தம்பி என்பவரால் வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆங்கிலக் கல்விக்கழகத்தில் இவரைத் தமிழாசிரியராக அமர்த்தி வைத்தனர். திருவனந்தபுர நகரம் அக்காலத்தில் உடம்பின் நலம் பேணுதற்கேற்ற ஒழுங்குகள் அமையப்பெறா திருந்தமையால், இரண்டரைத் திங்கள் மட்டுமே இவர் அங்கிருந்து, பின்னர் அவ்வலுவலை விட்டு நாகப்பட்டினந் திரும்பினர். இவர் திருவனந்தபுரத்தில் இருந்த இரண்டரைத் திங்களும், அந்நகரத்துச் சைவர்கள் வைத்து நடத்திய சைவ சித்தாந்த சபைகளிரண்டிற் சைவ சித்தாந்த உண்மைகளைப் பற்றிய விரிவுரைகளை இடையிடையே நிகழ்த்தி வந்தனர். இவர் செய்த அவ் விரிவுரைகள் அந்நகரத்திருந்த சைவ நன் மக்களாற் பெரிதுங் கொண்டாடப்பட்டன. அப்போது திருவனந்தபுர அரசர் கல்லூரியில் 'நாடகத் தமிழைப் பற்றி ஒரு விரிவுரை செய்யும்படி சுந்தரம்பிள்ளை யவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கிசைந்து 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 ஆம் நாள் இவர் ‘நாடகத்தமிழ்' என்பதனைப் பொருளாகக் கொண்டு, மிக ஆராய்ந்து கண்டதோர் அரிய விரிவுரையினை நிகழ்த்தினர். அவ்விரிவுரை நிகழ்ந்த அவையில் சுந்தரம்பிள்ளை யவர்களே அவைத் தலைவராயிருந்து, இவர் செய்த விரிவு ரையின் அருமையை மிகவும் வியந்து பேசினர். அவ் வவையிற் குழுமியிருந்த பெருங்கூட்டத்தவர் எல்லாரும் அதனைப் பெரிதும் பாராட்டினர். அப்போது இவர்க்கு ஆண்டு இருபது. அவ்வாண்டின் கடைசியில் இவர் நாகைக்குத் திரும்பினர்.

இதற்கு முன் இவர் நாகையிற் கல்வி L பயின்று வருங்காலத்தில், நாகை வெளிப்பாளையஞ் சைவசித்தாந்த சபையார், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரநாயக ரவர்களைச் சென்னை யினின்றும் இடையிடையே வருவித்து அவராற் சைவ சித்தாந்த அரும்பொருள் விரிவுரைகள் நடப்பித்து வந்தனர். நாயகரவர்கள் நிகழ்த்திய அவ்விரிவுரைகளை

ளைஞ

ராயிருந்த மறைமலை யடிகள் ஆவலோடுஞ் சென்று கேட்டு, அப்பொருள்கள் முழுமையுங் கேட்டபடியே மனத் தமைத்துச் சைவசித்தாந்த வுண்மை தெளிந்து, அதற்கு முன் தாம் பயின்றுவந்த ‘மாயவாத வேதாந்தம்' பொருந்தாமை கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/114&oldid=1583542" இலிருந்து மீள்விக்கப்பட்டது