உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் 16

பெயர் வாய்ந்த ஒரு திங்கள் இதழைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தக் கருதி, அதனைத் தம்மோடு உடனிருந்து நடத்தத்தக்கார் எவர் என்று ஆராய்கையில், நாயகரவர்கள் இவரே அது செய்யவல்லார்' என்று மறைமலை யடிகளைச் சுட்டிக்காட்டி, இவரைத் தம்பாற் சென்னைக்கு வருவித்தனர். அப்போது நல்லசாமிப்பிள்ளை யென்பார் சிற்றூரில் வழக்குத் தீர்க்கும் மன்றத்தில் நடுவராய் (Judge) அலுவல் பார்த்து வந்தனர். அவர் நாயகரவர்கள் கட்டளைப்படி உடனே சென்னைக்கு வந்து இவரது கல்வியறிவினையும் இயற்கை யறிவினையும் தாமும் ஆராய்ந்து பார்த்து வியந்து தம்மோடு இவரைச் சிற்றூர்க்கு அழைத்துச் சென்றனர். வரது உதவிகொண்டு, 'சித்தாந்த தீபிகை' எனப் பெயரிய திங்கள் இதழ் தமிழ்ப் பதிப்பின் முதல் இலக்கம் 1897 ஆம் ஆண்டு, சூன் திங்கள், 21ஆம் நாள் வெளிப்படுத்தப்பட்டது. அதன் முதல் ஐந்து இலக்கங்களுக்கே இவர் ஆசிரியராயிருந்து எழுதிவந்தனர். 'திருமந்திரத்' திலுள்ள அன்புடைமை, இரந்தார்க்கீதல், அறஞ்செயான்றிறம் என்னும் மூன்றியல் முப்பது பாட்டு களுக்கும், ‘சிவஞான சித்தியார்’ அளவையியல் காப்புச் செய்யுளோடு பதினான்கு செய்யுட்களுக்கும், ‘தாயுமான சுவாமிகள் பாடல்' பரி பூரணானந்த போதம் பத்துச் செய்யுட்களுக்கும், பொருள் வணக்கம் எட்டுச் செய்யுட் களுக்கும் எழுதிய விரிவுரைகளுங், 'குறிஞ்சிப் பாட்டைப்’ பற்றி எழுதிய உரையும், ‘அன்பு,’ ‘அருள்’ என்பவற்றைப் பொருளாகக் கொண்ட கட்டுரைகளும் ஆங்கிலத்தினின்று மொழிபெயர்த்து வரைந்த நான்கு செய்யுட்களும் ‘மூன்று கனவு' என்பதும், வேறு சில குறிப்பு களும் அப்போது இவரால் இயற்றப்பட்டு, அச் ‘சித்தாந்த தீபிகை' முதல் மூன்றிலக்கங் களில் வெளிப்படுத்தப்பட்டன வாகும். மேற்குறித்த நூல்களுக்கு இ இவரெழுதிய விரிவுரைகளும், மற்றைக் கட்டுரைகளும், இவர் புத்திளமைக் காலத்திலேயே எய்திய அரும் பெறற் கல்விப் புலமையினையும் ஆழ்ந்த அறிவின் நிறத்தையும் விளங்கக் காட்டும் பேரடையாளங்களாய் நிற்கின்றன. இவ்வளவும் இவர் சிற்றூர்க்குச் சென்றவரையில் நிகழ்நத வரலாறாம். இத்துணையே இந்நூலின் உரைக் குறிப்புகளுக்கு வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/117&oldid=1583545" இலிருந்து மீள்விக்கப்பட்டது