உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

  • சிந்தனைக் கட்டுரைகள்

117

செந்நாப்புலவர் - செவ்விய செய்யுட்களைப் பாடுதலிற் றேர்ந்த நாவினையுடைய பாவலர். உலுக்கீரீசியர் (Lucretius) என்பார் கிறித்து பிறப்பதற்கு முன் நூற்றாண்டில் உரோமா நகரில் இருந்த ஒரு பெரும்புலவர் ஆவர். போக்கு - போம்வகை. ஐயம் அற சந்தேகம் இல்லையாம்படி. ஏலாவாறு-முடியாத வகையாய். கட்புலனாற் காணப்படும் நமது பரு உடம்பு வெங்காயச் சருகுபோல் ஒன்றனுள் ஒன்றாய்ப் பொதிந்த வேறு நான்கு உடம்புகளோடு கூடியிருத்தலும் மறைமலையடிகள் இயற்றிய இறந்தபின் இருக்கும் நிலை என்னும் நூலிலும், சைவ சித்தாந்த ஞானபோதம் என்னும் நூலிலும் உள்ள சிவராச யோகம் என்னும் உரையிலும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. மாந்தர் மக்கள் சாயல் - நிழல் போல்வதொரு நுண்ணிய வடிவு.

-

-

பொதிந்துவைத்த மறைத்து வைத்த, திணித்து வைத்த; நன்னெறிக்குறிப்பு - நன்னடையைப் பற்றிய கருத்துக்கள். ங்கெடுத்துக்காட்டப்படுஞ் சிறுகதை முதனூலாசிரியரால், ஜோசேப்ஸ் (Josephus) என்னுங் கிரேக்க ஆசிரியரது நூலினின்றும் எடுத்துக் காட்டப் பட்டதாகும். ஈண்டு இவ்விடத்தில். அருக்கன் என்னும் பெயர் முதன் நூலில் உள்ள Archilaus என்னும் பெயரோடும், 'கிளிமொழி' என்பது Glaphyra என்னும் பெயரோடும் ஓசையொப்பனவாக வைக்கப் பட்டன. பின்றை உள்ளக்கசிவு. கடிந்து சினந்து. பிறகு. உருக்கம் முதுமொழி -பழமொழி, மூதறிவினர் கூறிய மொழி. குமரி கன்னி.

-

முதன்நூலில்

-

-

திறம் - மேன்மை, வலிமை: நாடி விரும்பி. ஒவ்வாதது - பொருந்தாதது. பயில - பழக; மன எழுச்சி - மனக் கிளர்ச்சி. நம்பகம் - நம்பிக்கை; நம்பு என்னுந் தமிழ் உரிச்சொல்லிற் பிறந்தது இச்சொல்; “நம்பு மேவு நசையாகும்மே" என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்; சிதைத்தல் - அழித்தல். கடவர் - கடமையுடையர்.

சிந்தனைக் கட்டுரைகள்

முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/142&oldid=1583645" இலிருந்து மீள்விக்கப்பட்டது