உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் 16

ஒலி அவ்விடத்தைக் கடந்து அப்பாற்

செல்லாவாறு

மலைகளேனுஞ் சுவர்களேனுந் தடையாய் நின்றால், அஃது அத் தடைமேற் றாக்குண்டு மீளவும் முன்போல் ஒலிப்பதேயாகும். ஓ என்பது ஏதோர் ஓசையுமின்றி அமைதியாய் இருக்குமிடத்திற் றோன்றும் ஓ என்னும் மெல்லிய பரந்தவொலி.

-

-

வெருட்சி திடுமெனத் தோன்றும் அச்சம். இலாகவர் (Locke): அறிவு நூல் ஞான நூல்; ‘நினைவுகளின் கூட்டுறவு’ என்பது (The Association of ideas) ஒரு நினைவு மற்றைப் பல நினைவுகளோடு தொடர்பு பட்டு நிற்றல்; இங்ஙனம் நிற்றலால் ஒரு நினைவு உள்ளத்திற் றோன்றிய வளவானே அது தன்னோடு ஏதேனும் ஒருவாற்றால் இயைபுடைய மற்றொரு நினை வினையும் அம்மற்றொன்று அங்ஙனமே பிறிதொன்றனையு மாக இவ்வாறு உள்ளத்தில் ஒரு வரிசையாகப் பல நினைவு களையும் அடுத்தடுத்து எழுப்பாநிற்கும். இயல் - அத்தியாயம். சொற் பயிற்சி சொல்லின் பழக்கம். ஒவ்வாத ஒப்புமை இல்லாத. கூளி - பூதம். பேதைப்பெண் - அறிவில்லாப் பெண். நிகழ்ச்சிகள் - சம்பவங்கள். சேய்மை -தூரம். ஆ -பசு. உள்ளப்பாங்கு மனத்தகைமை. இத்தகைய இத்தன்மைய வான; புல்லிய - அற்பமான. நடை -ஒரு வீட்டினுள் இருபுறத்தும் - உள்ள அறைகளுக்கு இடையேயுள்ள நடவை, (a gallery). தறைதல் - ஆணியால் இறுக்கல்.

-

-

-

-

-

அரைவாசி அரைப்பங்கு. உறை விடம் -குடியிருப்பு. அத்துணை - அவ்வளவு. புறம்படுத்தல் - வெளிப்படுத்தல். உயிர் - உயிர் நீங்கிய. பரக்க துறந்த விரிய. அரசு வீற்றிருந்த தலைமையாய் அமர்ந்திருந்த. எங்கணும் - எவ்விடத்தும் கடவுள் நேயம் இறைவனிடத்து வைக்கும் அன்பு, ஈசுவரப்பக்தி. வரலாற்று நூல் சரித்திர நூல். தெரிப்பன - அறிவிப்பன. தொன்றுதொட்டு பழமைக் காலந் தொட்டு பொய்க்கட்டு பொய்யாகக் கட்டி விட்டது. அடிப்படை அத்திவாரம்; அற்றது - இல்லாதது. எழூஉம் -எழுகின்ற. மன்பதைகள் மக்கட் கூட்டத்தார், (nations); பொதுச்சான்று பொதுவான சாட்சி. இணங்க- இசைய. குறிப்பாளிகள் - குறிப்பான ஆட்கள்.

-

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/141&oldid=1583640" இலிருந்து மீள்விக்கப்பட்டது