உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

115

செய்து, அங்ஙனந் தணிவு செய்யினும் அந்நிறம் ஒளி முதிர்ந்து தோன்றுமாறு செய்தல். குஞ்சி ஆண் முடிமயிர். தொடர்பு தொடர்ச்சி.

-

6.பேய்களும் ஆவிகளும்

இக்கட்டுரையும் அடிசனார் எழுதியபடியே பெரும் பான்மையும் மொழி பெயர்த்துரைக்கப்பட்டதாயினும், அவ்வுரை முகத்திற் சொல்லப்பட்ட இடிந்து பாழாய்ப் போன ஒரு கிறித்துவ குருவின் மடத்திற்கு ஈடாக, அதனோடொப்ப மதுரைக்கு அருகாமையிலுள்ள அழகர்மலைப் பக்கத்தில் இடிந்து பாழாய்க் கிடக்குங் கோட்டையினிடம் ஏற்பவைத் துரை க்கப்படுகின்றது. அங்ஙனமே விவிலிய நூலில் உள்ள பண்களுக்கு (Psalms) ஈடாக அவைபோலுந் திருவாசகம் ஏற்க வைத்துரைக்கப் பட்டது.

அண்டங்காக்கை - காக்கையிற் பெரிய இனம். கரைவது- கூவி அழைப்பது. முறை புத்தகம். தன்னைக் கூவியழைத்த இளைய அண்டங்காக்கைகட்கு இறைவன் இரை தந்தானென்று விவிலிய நூலிற் பண்ணிற் சொல்லப்பட்டதனை (psalms/147/9) அடிசனார் தம் உரையுள் எடுத்து மொழிந்தமையின், அதனோ டொப்பக் கருங்குருவிக்குச் சிவபிரான் அருள் புரிந்தமை எடுத்துக்காட்டப்பட்டது; "கருங்குருவிக் கன்று அருளினை போற்றி” என்று மாணிக்கவாசகப் பெருமானும் அருளிச் செய்தார்; இதன் வரலாற்றினைப் பெரும்பற்றப்புலியூர் நம்பியார் இயற்றிய திருவாலவாயுடையார் புராணத்திற் கண்டு கொள்க. அழகர்மலை யடிவாரத்தில் இடிந்து கிடக்குங் கோட்டையைச் சாரத் திருமால் கோயில் ஒன்று தனித்து உளது. இயங்குதல் -நடமாடுதல். குழைந்த - வாடிய.

கிட்டத்தட்ட

-

ஏறக்குறைய. அச்சுறுத்தல்; அஞ்சச் செய்தல். திங்கள் - மாதம். பணிப்பெண் - குற்றேவல் செய்வோள். வற்புறுத்தல் - உறுதிப்படுத்திச் சொல்லல். ஆண்டு - வருஷம். தளவாடங்கள் - தட்டுமுட்டுகள். மசங்கல் மாலை - இருள் மயங்கிய மாலைக்காலம். போதரா வெளியே வராத. வைகின - தங்கின. முகடு உச்சி. எதிரொலி என்பது ஓரிடத்துண்டாய

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/140&oldid=1583635" இலிருந்து மீள்விக்கப்பட்டது