உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

129

4. அறம் இன்பத்தையே முதலும் ஈறுமாக உடையது

ம்

இனி, அம்மறுப்புரைகாரர், அறமே முதல் நிற்கற்பாலது, இன்பம் அந்நீரதன்று என்றதூஉம் பொருந்தாமை காட்டுதும். ஒரு புல் நுனிமேல் நிற்கும் நீர்த்துளியிற் பெருக்கக் கண்ணாடி யின் உதவிகொண்டு காணப்படுஞ் சிற்றுயிர்கள் முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்கள் மாட்டும் இன்ப உணர்ச்சியும், ன்பத்தைப் பெறும் வேட்கையும், அதற்கேற்ற முயற்சியும் ஒரு தினைத்தனையும் பிழையாமற் காணப்படுகின்றன. அது போல் அறத்தைப் பற்றிய உணர்ச்சியும், அதனைப் பெறும்வேட்கையும், அதற்கான முயற்சியும் அங்ஙன மெல்லா உயிர்களிடத்துங் காணப்படாமல், ஆறறிவுடைய மக்களுள்ளும் பிற உயிர்கள் பால் அன்பு நிகழப் பெற்ற ஒருசிலர் மாட்டே காணப் படுகின்றன. இவ்வாற்றல் இன்ப உணர்ச்சியினும் அறவுணர்ச்சி மிகச்சிறுகிய நிலையில் உளதாதலும், அதுவும் பிற உயிரின் இன்பத்தைத் தம் முயிரினின்பத்தோ டொப்பக் கருதினார் பாலன்றி உளதாகாமையுற் தேர்ந்து காணவல்லார்க்கு இன்ப உணர்ச்சியின் வாயிலாகவே அறவுணர்ச்சி விளைவதன்றி, அறவுணர்ச்சி வாயிலாக இன்ப உணர்ச்சி விளையாமை இனிது ளங்கா நிற்கும். இதுபற்றி யன்றோ தெய்வத் திருமூலரும், 'நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று அருளிச் செய்தார். ஒருவன் தான்பெற்ற இன்பத்தை இவ்வையகத்துள்ள எல்லா உயிர்களும் பெறுதல் வேண்டுமென விழைந்து. அதற்கேற்ப முயலும் முயற்சியே அறம் எனப்படும். பிறவுயிரின் இன்பத்தைக் கருதாது செய்யும் முயற்சிகளெல்லாம் அறத் துக்கு மாறான மறம் எனப்படும். பிறர்க்கு வறுமையால் வந்த துன்பத்தை நீக்குதற்பொருட்டுப் பொருளுடையார் அவர்க்குப் பொருளீந்து செய்யும் அறம் எத்துணை இன்பம் பயக்கின்றது. இதுபற்றி யான்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவரும்,

66

“ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர்

(குறள் - 228)

என்று அருளிச் செய்தார். தமக்கும் பிறர்க்கும் நிகழும் இன்பம்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/154&oldid=1583702" இலிருந்து மீள்விக்கப்பட்டது