உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் 16

நுதலுஞ் செய்யுட்கள் மட்டும் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணூற்று நான்கென்பது மேலே காட்டப் பட்டமையால், இன்பத்தை நுதலுஞ் செய்யுட்கள் ஏனை அறம் பொருள்களைத் தனித் தனியே நுதலுஞ் செய்யுட்களிலும் சிறிதேறக்குறைய ஆயிரஞ் செய்யுட்கள் மிகுந்திருத்தல் காணப்படும். இதுவேயுமின்றி, அறப்பொருள் களை நுதலும் பாட்டுக்களுள்ளும் இன்பத்தைக் கூறும் பகுதிகளும் ஆங்காங்கு விராய் வந்திருக்கின்றன. இவ்வாறாகப் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் யாங்கணூம் பெரும் பான்மை யாக எடுத்துப்பேசப் படுவது. இன்பமேயாய் இருந்தலினாலும், ஏனை அறம் பொருள்களைச் சுட்டுவன அவற்றில்மிகக்குறைந்த னவாயிருந்தலினாலும் அவ்விலக்கியங்களின் வழியே இலக்கண நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனாரும் அவற்றோடு மாறுகொள்ளாமைப் பொருட்டு இன்பத்தை முதற்கண்ணும், ஏனைப் பொருள் அறங்களை அதன் பின்னுமாக வைத்து,

"இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”

என்று சூத்திரஞ் செய்தருளினார்.

எனவே, ஒருகாரணமும் பற்றாது தாம் எடுத்துக்கொண்ட அகப்பொருளுக் கேற்ப ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முதற்கண் வைத்தாரல்லது, உறுதிப்பொருள்களில் இன்பமே முதல் நிற்கவேண்டு மென்பது அவர்க்குக் கருத்தன்று என்ற அம் மறுப்புரைகாரர் கூற்றுப் பொருத்தமில் போலிக் கூற்றாமென்க. பண்டைத் தமிழிலக்கியங்கள் எல்லாம் உறுதிப் பொருள்களில் முதல் நிற்றற்குரிய இன்பத்தின் விழுப்பம் உணர்ந்தே அதனை ஏனையவற்றினும் பார்க்க உயர்த் தெடுத்துப் பேசுவ ஆயின. அந் நுணூக்கம் உணர்ந்தே தொல்காப்பியனாரும் அகப்பொருளொழுக்கமாகிய இன்பத்தினை முன் வைத்து, ஏனைப் புறப்பொருள் ஒழுக்கங்களை அதன்பின் வைப்பாராயினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/153&oldid=1583697" இலிருந்து மீள்விக்கப்பட்டது