உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

கருத்தோவியம்

127

இன்பத்தின் வழிப்படூஉம் ஏனை அறம்பொருள்களின் மேற்றான புறப்பொருளினைச் சுருக்கியே பாடுதலும், நன்குணர வல்லார்க்கே பண்டைத் தமிழாசிரியர் எல்லாரும் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தமை நன்கு புலனாம். பழைய சான்றோர் செய்யுட்களைத் தொகுத்த எட்டுத்தொகையுள் 'நற்றிணை நானூறு செய்யுட்களும், 'குறுந்தொகை' நானூறு செய்யுட்களும், 'ஐங்குறுநூறு ஐங்குறுநூறு' ஐநூறு செய்யுட்களும், கலித்தொகை நூற்றைம்பது செய்யுட்களும், அகநானூறு நானூறு செய்யுட்களும், பத்துப் பாட்டில் ‘முல்லைப் பாட்டு’, நெடு நல்வாடை’, ‘குறிஞ்சிப்பாட்டு', 'பட்டினப்பாலை என்னும் நான்கு பெரும்பாட்டுக்களும், பதினெண்கீழ்க் கணக்கில் ‘கார்நாற்பது', 'ஐந்திணை ஐம்பது’, ‘ஐந்திணை எழுபது’, ‘திணை மொழி ஐம்பது’, ‘திணைமாலை நூற்றைம்பது’, ‘திருக்குறள்’, காமத்துப்பால் இருநூற்றைம்பது, ‘நாலடியார்' காமத்துப்பால் முப்பது செய்யுட்களும் ஆகமொத்தம் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணூற்று நான்கு அருந்தமிழ்ச் செய்யுட்களும் அகப்பொருளின் பாலதாகிய இன்பத்தையே நுதலுகின்றன.

கு

ன்னா

இனி,எட்டுத்தொகையிற் பதிற்றுப்பத்து’ நூறுசெய்யுட் களும் பரிபாடல்' எழுபது செய்யுட்களும், 'புறநானூறு’ நானூறு செய்யுட்களும், ‘பத்துப்பாட்டில்' ஆறு செய்யுட்களும் பதினெண் கீழ்க்கணக்கில் ‘நாலடியார்' முன்னூற்றெழுபது செய்யுட்களும், 'நான்மணிக்கடிகை’ நூறு செய்யுட்களும், இனியவை நாற்பது' நாற்பது செய்யுட்களும், நாற்பது' நாற்பது செய்யுட்களும், ‘களவழி நாற்பது நாற்பது செய்யுட்களும்’ ‘திருக்குறள்' ஆயிரத்து எண்பது செய்யுட் களும், ‘திரிகடுகம்' நூறும் ‘ஆசாரக் கோவை’ நூறும், ‘பழ மொழி' நானூறும், 'சிறுபஞ்ச மூலம்’ நூறும், 'முதுமொழிக் காஞ்சி’ ஒன்றும், ‘ஏலாதி’ நூறும், ஆக மொத்தம் மூவாயிரத்து நாற்பத்தேழு செய்யுட்களும் புறப்பொருளின் பாலவாகிய அறப் பொருள்களை நுதலுகின்றன. இவ் விரண்டையும் நுதலும் மூவாயிரத்து நாற்பத்தேழு செய்யுட்களையும் இருகூறாகப் பகுத்தாற், சிறிதேறக் குறைய அறத்துக்கு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து மூன்றும், பொருளுக்கு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து மூன்று செய்யுட்களுமே வருகின்றன. இன்பத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/152&oldid=1583692" இலிருந்து மீள்விக்கப்பட்டது