உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

131

தென்று தொல்காப்பியனார் கூறவில்லை என்று அம் மறுப்புரை காரர் துணிந்து சொல்லுதலை உற்றாயுரங்கால் அவர் செந்தமிழ் மொழிக்கு நந்தா மணிவிளக்காந் தொல் காப்பியத்தை ஒரு சிறிதாயினும் நல்லாசிரியரையடுத்து நன்கு ஆராய்ந்து பயின்றவரல்ல ரென்பது புலனாகா நிற்கும். ஆசிரியர் தால்காப்பியனாரே பொருளதிகாரத்துப் பொருளியலில் இருபத்தொன்பதாஞ் சூத்திரமாக நிறுத்திய,

L

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வருஉம் மேவற்றாகும்”

உணராமையினை

என்பது இன்பத்தையே ஏனைப் பொருள் அறங்களினும் முதன்மைபெற்றதாக வைத்துக் கூறாநிற்கவும் அதனை அறியாது கூறிய அவருரையே அவர் தொல்காப்பியம் நன்கெடுத்துக்காட்டா நிற்கின்றது. அச்சூத்திரத்துக்குப் போந்த "மேவற்றாகுமென்றார், என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின் ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தாரெனப் படாது. அவ்வின்பம் எல்லா உயிர்க்கும் பொதுவென்பதூம்உம் அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழுமென்பதூ உங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்தவரு மென்றாயிற்று” என்னும் பழைய உரையாசிரியர் உரைப் பகுதியையேனும் அவர் உணர்ந்திருந்தனராயின், எல்லா உயிர்க்கும் இன்பம் ஒன்றுமே உரித்தாவதென்பதூஉம், ஏனைப் பொருளறங்கள் மக்கள் பால் மட்டும் உண்டாவனவாய் இன்பத்தையே முதலும் முடிவுமாய்க் கொண்டு நிகழு மென்பதூஉம், அதுபற்றியே தொல்காப்பியனார் இன்பத்தை முன்னும் பொருளறங்களை அதன்பின்னுமாக வைத்துக் கூறினாரல்லது ஒருகாரணமும் பற்றாது அங்ஙனம் கூறினாரல்ல ரென்பதூஉம் விளங்க அறிந்திருப்பர். இவையெல்லாம் ஒருசிறிது முணராது தொல்காப்பியனார் கருத்தை முற்றும் அறிந்தார் போன்று துணிபுரை நிகழ்த்திய அம்மறுப்புரைகாரர்தந் துணிபு.

“கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்

(குறள்-405)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/156&oldid=1583711" இலிருந்து மீள்விக்கப்பட்டது