உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

  • மறைமலையம் -16

என்னும் அருமைத் திருக்குறளுக்கு இலக்காய்த் தமிழ் வல்ல சான்றோரால் நகையாடற் பாலதாய் முடிந்தமை காண்க. என்று இத்துணையுங் கூறியவாற்றால் ஆசிரியர் ஆ தொல்காப்பியனார் இன்பத்தை முன்னும் ஏனைப் பொருளறங்களை அதன்பின்னும் வைத்துக் கூறிய முறையே அடிப்பட்ட சான்றோர்தம் நூல் வழக்கிற்கும் ஏனையுலக வழக்கிற்கும் பொருந்துவதா மென்பதூஉம், இம்முறையோடு திறம்பிப் புதிது புகுந்த பௌத்தசமண் சமயங்களின் பொருந்தா வழக்கேபற்றிப் பிற்காலத்தார் அறத்தை முன்னும், ஏனைப் பொருளின்பங்களைப் பின்னும் வைத்த தலைதடுமாற்ற முறை அவ்விருவகை மெய்வழக்கொடும் ஒவ்வாதமென்பதூஉம் இனிது பெறக்கிடந்தமை காண்க.

6 . திருவள்ளுவர் கொண்டது தமிழ்முறை யன்று

னி

இனி ஆசிரியர் திருவள்ளுவனார் அறம் பொருள் இன்பமென வைத்து நூல் செய்த முறை தமிழ்முறை யன்றாய்ப்பௌத்த சமண் சமயத்தவர்களாகிய வடநூலார் தாமே புதிது வகுத்த முறையேயாதலை மேலே காட்டினாம். இங்ஙனந் திருவள்ளுவர் கொண்டமுறை தமிழ் நூல் வழக்கன்றென்பதற்குத், திருக்குறளுக் குரைகண்ட பரிமேலழகி யார் காமத்துப்பால்' முகத்தில் “இவர் பொருட்பாகு பாட்டினை அறம் பொருள் இன்பமென வடநூல் வழக்குப் பற்றி ஓதுதலான்” என்று உரை உரைத்தமையே சான்றாம். பண்டு தொட்டுவந்த தமிழ்நூன் முறையெல்லாம் இன்பத்தை முன்னும் பொருளறங்களைப் பின்னும் வைத்தலேயாம் என்பதனை மேலே விரித்துக் காட்டினாம். ஈண்டுப் பின்னுஞ்சிறிது அதனையே காட்டுதல் இன்றியமையாத தாகின்றது. பழைய பரிபாடலிற் செவ்வேள் மேற்பாடப் பட்டிருக்கும் ஒன்பதாம் பாட்டினை இயற்றியருளினவரான ஆசிரியர் குன்றம்பூதனார் அப்பாட்டின்கண் வடமொழி நான்மறை வல்ல புலவரைநோக்கித் தமிழது சிறப்பு அறிவுறுத்துகின்றுழித், தமிழுக்கே உரித்தான காதலின்ப ஒழுக்கத்தி னையும் அவ்வொழுக்கத்தினை யுடைமையால் வள்ளிநாச்சியார் சிறந்தமையும், அவ்வகத்தமிழை ஆராய்ந்தமையால் முருகப் பிரான் சிறந்தமையும், நன்கெடுத்து விரித்து, ஓதுவார்க்குங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/157&oldid=1583716" இலிருந்து மீள்விக்கப்பட்டது