உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

133

கேட்பார்க்குந் தமிழ்ச்சுவை புலனாமாறு விளக்குதல் காண்க. இங்ஙனமே பத்துப்பாட்டின்கண் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டை இயற்றிய நல்லிசைப் புலமை மலிந்த சான்றோருந், தங்காலத்திருந்த பேரறிஞர்களாற் "புலனழுக்கற்ற அந்தணாளன்” எனவும், "பொய்யா நாவிற் கபிலன்” எனவும் புகழ்ந்து பாராட்டப்பெற்றவரும் ஆன ஆசிரியர் கபிலர், தமிழ் நலம் அறியாத ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் நலம் அறிவித்தற்பொருட்டுத் தாம் பாடிய குறிஞ்சிப் பாட்டின்கண், இக்காதலின்ப அகப்பொருளொழுக்கத் தினையே விரித்தெடுத்துப் பெரிதுஞ் சுவைதுளும்பப் பாடி யிருத்தல் காண்க. இன்னும் இதனை விரிப்பிற்பெருகும். இங்ஙனமெல்லாந் தமிழ்நாட்டின் கணிருந்த அடிப்பட்ட சான்றேரெல்லாருந் தமிழுக்குச் சிறந்தது இன்பவொழுக்க மென்றே ஒருமுகமாய் நின்று கட்டுரைத்துச் சொல்லுதலின், று அவர்க்குப் பிற்காலத்தே நூல்செய்த திருவள்ளுவனார் கொண்ட முறை பரிமேலழகியார் காட்டியவாறு தமிழ்முறை யன்றென்பது தெற்றென விளங்காநிற்கும்.

7. திருவள்ளுவர் வேறுமுறை கொண்ட காரணம்

அற்றேல், தமிழ்மக்கள் பொருட்டுத் தமிழ்நூல் இயற்றப் புகுந்த திருவள்ளுவனார், அத் தமிழ் முறையோடு திறம்பி வட நூன்முறையைக் கைப்பற்றிய தென்னையெனிற் கூறுதும். இத்தென்றமிழ் நாட்டுப் பழைய வரலாறுகளை நன்காய்ந்துணர் வார்க்குத் திருவள்ளுவனார் இருந்த கி.பி. முதல் நூற்றாண்டிற் பௌத்தசமண் மதங்கள் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்தமை நன்கறியக்கிடக்கும். இதற்குத் திருவள்ளுவர் க காலத்தை யடுத்துச் சய்யப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பௌத்தசமண் காப்பியங்களே ஒரு பெருஞ் சான்றாம். அவ்வாறு குடிபுகுந்த அச் சமயிகள் இரு பாலாரும், உலகிய லொழுக்கத்தை ஆழ்ந்தாராய்ந்தறிந்த சான்றோர் தம் நூல் வழக்கை நுணுகியாராயும் அறிவும துகையின்றி இன்பத்தினை இழித்துப்பேசி, அவ்வாற்றால் னைமக்களினுந் தாமுயந்தார் போற்காட்டி, அங்ஙனங் காட்டுந் தமது கரவொழுக்கம் நிலை பெறுதற்பொருட்டு அறத்துக்கே உயர்வு சொல்வாராய், இந்நாட்டவரைப் பெரிய

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/158&oldid=1583721" இலிருந்து மீள்விக்கப்பட்டது