உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

தாரு

❖ LDM MLDMшLD -16

பொய்ம்மயக்கிற் படுப்பாராயினர்.

இவ்வாறு

ன்பத்தை இகழ்ந்து அறத்தை உயர்த்துப்பேசி ஆரவாரஞ் செய்யும் பௌத்தசமண குருக்களின் உரைகளைக் கேட்ட தமிழ்ப்பொது மக்கள், அவர் இகழ்ந்து பேசிய இன்ப வொழுக்கத்தைத் தாமும் ஏனைமக்களும் விடமாட்டாமை நன்குணர்ந்தும், அறிவுரை கூறும் அவர் தம்மினும் உயர்ந்தார் போலுமென மயங்கிக், கரவொழுக்கத்தில் நிற்கும் அக் குருக்கண் மாரையும், அவர் தஞ்சொற் செயல்களையும் மிக உயர்த்துப்பேசுவாராயினர். இவ்வாற்றாற் பௌத்தசமண் கோட்பாடுகள் உண்மையில் மக்களியற்கைக்கும், அவர் தம் உலகியல் ஒழுக்கத்திற்கும் ஒருசிறிதும் பயன்படாவாயிருந்தும். போலியாக எங்கும் பரவி வரலாயின. இதுகண்ட தமிழ்ச் சான்றோர்கள் அப்புறச் சமயக்கோட்பாடுகள் மக்கட்குப் பயன்படாமையின் உள்ளீடில்லா வெறும் பதர்களாதல் தெரிந்து, உண்மை உலகியல் ஒழுக்கத்திற்கு ஏற்ற அறத்தின் கூறுபாடுகளைத் தமிழ்த் தொல்லாசிரியர் கொண்ட உண்மைப் பயன்றரு முறையில் இன்பத்தோடு படுத்து விளக்குவான் புகுந்தனர். அங்ஙனம் புகுந்தாருள் தலைநின்றவரான திருவள்ளுவனார், தங்காலத்துத் தம்மோடுடனிருக்கும் மக்கள், பௌத்த சமண் மயக்குரையிற் சிக்கி அறத்திற்கே உயர்வு சொல்லுதல் கண்டு, அவர் வழியேசென்று அவரைத் திருத்துவாராய், அறத்தை முன்வைத்து நூல் செய்வாராயினர். அங்ஙனம் நூல் செய்கின்றுழிப், பெரும்பாலும் இம்மையையே நோக்கின இல்லறமும், பெரும் பாலும் மறுமையையே நோக்கின துறவறமும் என அறத்தை இரண்டாக வகுத்து, அவ்விருவகையறமும் பொருளை இன்றி யமையாத கருவியாக அவாவுதல் பற்றிப், பொருளை அதன் பின் வைத்து, அவ்வாறு பொருள் துணையாக அவ் விருவகை அறத்தானும் அடையப்படும் இன்பமும், இம்மைக்கண் நுகரப்பட்டு இல்லறத்துக் கேதுவாய் நிற்குங்காதலின்பமுந், துறவறத்தின் பயனாய் மறுமைக்கண் நுகரப்படுந் திருவருள் இன்பமுமென இரண்டாதல் தெரிந்து, இன்பத்தினை இறுதிக் கண்ணும் வைத்து நூல்யாப்பாராயினர். ஆகவே, இறுதிக்கண் அவர் நிறுத்திய இன்பத்துப் பால் காமவின்பத்தினையே நுதலுவதென்று அம் மறுப்புரைகாரர் கூறியது பொருத்தமில் கூற்றாதல் காண்க. இறுதிக்கண் நின்ற இன்பத்துப்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/159&oldid=1583726" இலிருந்து மீள்விக்கப்பட்டது