உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

135

இல்லறத்தின் பாலதான காதலின்பமொன்றனை மட்டுமே உணர்த்துவதன்று. ஆழ்ந்து நோக்குவார்க்கு, அது துறவறத்தின் பாலதான திருவருளின்பத்தையும் ஒருங்கு உணர்த்துவதேயாகும். இங்ஙனமே தமிழ்நூல்களிற் கூறப்படும் அகப்பொருட்

காதலொழுக்க மெல்லாம் இம்மையின்பமொன்றனையே உணர்த்தாமல், திருவருளின்பத்தையும் உடனெடுத்து ஓதுவதென்பதற்குச், சைவவமய ஆசிரியரில் முதல்வரான மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக்கோவையார் அருளிச் செய்ததையும், ஏனை அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலான நம் சமயக்குரவர்களுந் தாமருளிச் செய்த திருப் பதிகங்களில் ஆங்காங்கே தலைவன் தலைவி முறையில் வைத்து றைவனைப் பாடியிருத்தலும், சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான திருவுந்தியார்,

“பெற்ற சிற்றின்பமே பேரின்ப மாயங்கே முற்றவரும் பரிசு உந்தீபற

முளையாது மாயைஎன்று உந்தீபற”

என்று உரைத்தலுமே சான்றாம். அகப்பொருட் காதல் ஒழுக்கத்தினைக் கூறுந் திருச்சிற்றம்பலக் கோவையார் இவ்வாழ்ந்த திருவருளின்பக் கருத்தும் உணர்த்தும் பெற்றியது என்பதற்குச் சிவஞானி ஒருவர் இயற்றின திருக்கோவையார் உண்மை என்னும் நூலுஞ் சான்றுபகரும். எனவே, திருவள்ளு வனார் தமதருமைத் திருக்குறள் நூலின் இறுதிக்கண் நிறுத்திய இன்பத்துப்பால், அவர் தாம் வகுத்த இல்லறத்துறவறம் இரண்டிற்கும் பொதுவான இன்பத்தையே உணர்த்துங் கருத் துடையதன்றி இல்லற நுகர்ச்சியொன்றற்கே உரிய காதலின்பத் தினை மட்டும் உணர்த்துவதன்றென்பது கடைப்பிடிக்க. இவ்வாற்றல், இல்லாளொடு கூடியிருந்து நுகரும் இன்பமே காமத்துப்பாலிற் சொல்லப்பட்டதென்னும் அம்மறுப்புரை காரர் கூற்று உள்ளீடில்லாப் போலியாய் ஒழிந்தமை கண்டு கொள்க.

8. திருவள்ளுவரும் இன்பத்துக்கே முதன்மை தந்தமை

இனிப், பௌத்தசமண் சமயக் குருக்கண்மார் இல்லறத்தை இகழ்ந்து துறவறத்தையே பெரிது கொண்டாடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/160&oldid=1583730" இலிருந்து மீள்விக்கப்பட்டது