உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் 16

கூறியது இரு வகை வழக்கிற்கும் மாறுகோளாம் என்க. எனவே, காதலின்பத்தினை அடிப்படையாய்க் கொண்டே ழுந்த இல்லறத்தைத் தெய்வத் திருவள்ளுவர் முன்வைத்து நூல்யாத்தது, அவர் பண்டைச் செந்தமிழ் நல்லாசிரியர் நிறுத்திய மெய்வழக்கிற்கு மாறாகாமைப் பொருட்டேயா மென்பதூஉம், தற்காலத்துப் புதிது புகுந்த பௌத்தசமண் சமய வழக்குப் பற்றி அறத்தை முதல் நிறுத்தினும் அவ்வறத்திற்கு அடிப்படையான இன்பத்துக்கு முதன்மை கொடுத்தலே அவர்தம் உண்மைக் உண்மைக் கருத்தாமென்பதூஉம், இப்பெற்றி யெல்லாம் நன்காய்ந்துபாராது அம்மறுப்புரைகாரர் கூறிய கூற்றுத் திருவள்ளுவனார் கருத்தொடு முரணிப் பிழைபடுவதாம் என்பதூஉந் தேற்றமாதல் காண்க.

9. உயிர்களின் முயற்சிக்கு ஊழ் முதற்காரணம் ஆகாது இனி இன்பத்தை நுதலியே பொருள் ஈட்டுதலும், அறஞ் செய்தலும் நிகழ்கின்றன என்னும் எமது கோட்பாட்டுக்கு முதலில் இணங்கிப் பேசியவர். அம்மட்டில் அமையாது இன்பத்தை நுதலி மக்கள் செய்யும் அவ்விரு வகை முயற்சியும் முட்டுப்படுதற்குக் காரணம் பழவினையே என்கின்றார். எல்லா உயிர்களும், அவ்வுயிர்களிற் சிறந்த மக்களுஞ் செய்யும் முயற்சியெல்லாம் இன்பத்தை நுதலியே நடைபெறுதல் மறுப்புரை காரரை யுள்ளிடட எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தாகலின் அவ்வுண்மையினையே யாம் எடுத்து விளக்கின மன்றி, மக்கள் செய்யும் முயற்சி பழவினையால் முட்டுப்பட்டு வறிதாதலையேனும், அன்றி நிறைவேறுதலையேனும் எடுத்துப் பேசினேமல்லேம். அங்ஙனமாகவும், அவர் எடுத்த பொருளை விட்டு அதற்கியையில்லாத தொன்றனை எடுத்துரைத்தல் மேற்கோள்மலை வென்னுந் தோல்வி (நிககிரகஸ்தான) முறையாதலை உணர்ந்திலர் போலும்! இன்பத்துக்கு முதன்மை சொல்லும் எமது மேற்கோளை (பிரதிஞ்ஞை) மறுக்கப் புகுந்தவர் அதனை மறுத்து அறத்துக்கு முதன்மை சொல்லுந் தமது மேற்கோளை நாட்டல் வேண்டுமேயல்லாமல், அதனை விடுத்துப் பழவினைக்கு இடையே முதன்மை சொல்லப் புகுதல், மறுப்பெழுதும் முறை இன்னதென்றே அறியாதார்தங் குழறு படையாம். அறம் முதலியவற்றிற்குக் காரணம் பழவினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/163&oldid=1583745" இலிருந்து மீள்விக்கப்பட்டது