உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

149

அற்றாயினுந், தொழில்வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்துணரக் கிடக்கு மென்றல் ஆகாதோ வனின்; ஆகாது, பண்டைநாளிலிருந்த மக்களுள் ஒரு குடும்பத்தாரிலேயே பலர் பற்பல தொழில்களைச் செய்தன ரென்பதும், அவ்வாறு பல வேறு தொழில்களைச் செய்யினும் அது பற்றித் தம்முள் வேறுபடாது ஒன்றாகவே யிருந்தன ரென்பதும்இருக்குவேதஒன்பதாம்மண்டிலத்தின்கட் போந்த (169,9), “யான் பாடல்களைச் செய்கின்றேன்; என் தந்தையோ ஒரு மருத்துவன்; என்தாயோ திரிகையில் தானியங் களை அரைக்கின்றான்; செல்வத்தைப் பெறும் பொருட் டாகப் பல்வேறு சூழ்ச்சிகளால் ஆக்களைப்போல யாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கின்றோம்"

என ஓர் ஆரியக்குடிப்பிறந்தான் இயற்றிய செய்யுளால் காண்க. இஞ்ஞான்றும்,

தெளியப்படுகின்றமை

நன்கு பார்ப்பனர் என்றுஞ் சைவவேளாளர் என்றுந் தம்மை யுயர்த்துப் பேசிக் கொள்வாரிலேயே ஒருபாலார் நூல் ஓதுகின்றார் ஓதுவிக்கின்றார், ஒருபாலார் திருக்கோயில்களில் தாண்டுபுரிகின்றார், ஒரு பாலார் உழவு செய்கின்றார் செய்விக்கின்றார், ஒருபாலார் ஊரூர் சென்றும் ஓருரிலிருந்தும் பண்டங்கள் கொண்டுவிற்கின்றார், ஒரு பாலார் உணவுப் பண்டங்கள் செய்து விற்கின்றார், ஒரு பாலார் இசை பாடிப் பிழைக்கின்றார், ஒருபாலார் நாடகம் ஆடிக் காலங் கழிக்கின்றார், ஒருபாலார் அரசின் கீழ்ப் பல துறைகளில் அமர்ந்து ஊழியஞ் செய்கின்றார், ஒருபாலார் மருத்துவத் தொழில் புரிகின்றார், ஒருபாலார் மன்றங்களில் வழக்காடு கின்றார், இன்னும் இங்ஙனமே அவர்செய்யுந் தொழில்கள் எத்தனையோ பல; அவ்வாறெல்லாம் அவர்கள் பற்பல தொழில்களைச் செய்தும், தம்முள் ஏதும் வேற்றுமையின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்யக் காண்டுமன்றோ? ஆகவே, தொழில் வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்தறியப் படுமென்றல் பொருந்தாதென விடுக்க.

13. காரைக்காலம்மையார் மனைவாழ்க்கை

னிக், காரைக்காலம்மையார் தங் காதற்கருத்தறிந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/174&oldid=1583797" இலிருந்து மீள்விக்கப்பட்டது