உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

❖ LDM MLDMELD -16 →

வேற்றுமையும் மொழிவனவாகப் பிழைபடக் கருதி அவை தம்மையே எடுத்துக் காட்டி இழுக்கினார்.

நன்று, தொல்காப்பியத்திற் சாதி வேற்றுமை நுவலுஞ் சூத்திரங்கள் இல்லாதது உண்மையேயாயினுந், தொழிலால் வேறுபட்ட கூட்டத்தார் பலர் தமக்குள் உண்ணல் கலத்தல்கள் நிகழ்ந்தமையாவது அதன்கட் சொல்லப்பட்டுளதோ வெனின்; உளது, குறிஞ்சி நிலத்தில் வைகும் வேட்டுவ மகளிரை மருத நிலத் தலைவர்களான வேளாளர்கள் மணந்து கொண்டமையும், அவர்களோடு ஒருங்கிருந்து அவர்கள் அட்டுப் படைத்த ணவினை அமிழ்தினுஞ் சிறந்ததாகப் பாராட்டி அருந்தினமையுந், தொல்காப்பியத்துக் களவியல்,16ஆம் சூத்திரத்தில்,

66

புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்

பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்

என்றும்,

“வேளாண் எதிரும் விருந்தின் கண்ணும்” என்றும், கற்பியல், 29 ஆம் சூத்திரத்தில் “வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தும்” என்றும், கற்பியல், 5ஆம் சூத்திரத்தில், “சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கென “அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும்”

என்றும் போந்த அருளுரைகளால் விளக்கமாக அறியப் படுகின்றனவல்லவோ? இங்ஙனம் அவ்வந்நிலத்துத் தொழிலால் வேறுபட்ட மக்கள் அதுபற்றித் தம்முள் உண்ணல் கலத்தல் களினும் வேறுபடாமல் ஒருங்கு அளவளாய் வாழ்ந்தமை யினைத் தெற்றென எடுத்துரைக்குந் தெய்வத் தொல்காப்பிய நூற்கருத்தினை எள்ளளவும் உணர்ந்து பாராத அம் மறுப்புரைகாரர், அதனைத் தமது சாதியிறு மாப்புரைக்குத் துணையாகக்கொண்டது, பெரிய கருங்கல்லைப் புணையாகக் கொண்டு பெரிய கடலை நீந்தப் புக்கோன் புன்செயலாய் முடிந்தமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/173&oldid=1583792" இலிருந்து மீள்விக்கப்பட்டது