உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

151

ரைத்ததோடு அமையாது, அங்ஙனங் காதன் மணஞ்செய்த பண்டையுயர்ந்தோரையும், அம் மணத்தினை விதந்தெடுத்து நூல்யாத்த தெய்வ ஆசிரியரையு மெல்லாம் வேசி மக்கள் வகுப்பின்பாற் படுத்த அம்மறுப்புரைகாரர் அத் தமிழ் மேன்மக்கள் மரபில் வந்த ஒருத்தி வயிற்றிற் பிறந்தவரோ அல்லரோ அறிகிலம். ஒருகால் அவர் தம்மை ஆரிய வகுப்பின் கண் ஒருத்தி பாற் பிறந்தவராகக் கருதியிருக்கலாமெனின், ஆரிய வேதமுங் காதலன்மணத்தையே விழுமியதெனக் கொண்டு மொழிதலின், ஆரிய வேத நூலாசிரியரும் அவர் காலத்து ஆரிய மக்களும் எல்லாங் காதன் மணஞ் செய்தே வாழ்ந்தமை புலனாம்; அவ்வாறு காதன்மணஞ் செய்த ஆரியரும் அம் மறுப்புரைகாரர் கூற்றின்படி வேசிமக்களேயாய் முடிதலின்,அவர் ஆரியப்பெண் ஒருத்தி வயிற்றிலும் பிறந்தவரல்லர் போலும்! இப் பரத நாட்டின்கட் பண்டுதொட்டு வாழ்ந்து வருந் தமிழர் ஆரியரெல்லாரும் வேசிமக்களாக இவரதுரையாற் பெறப்படுதலின், இவர் இவ்விருவேறு இனத்தவளல்லாத வேறெவ்வினத்தவள் வயிற்றிற் பிறந்தாரென்பதை அதனை ஆராய விரும்புவாரே நிலையிடற்பாலார்.அதுகிடக்க.

இனிப், பண்டைநாளின்கணிருந்த உயர்ந்த மக்கள் எவருங் காதன் மணஞ் செய்யவில்லை என்று படுபொய் மொழிந்த அம் மறுப்புரைகாரர், அப் பொய்யுரையைப் பள்ளிக் கூடத்துச் சிறுவர்பாற் சென்று உரைப்பராயின், அவர் உடனே இவர்தம் பொய்யுரையின் புன்மையினை நன்கெடுத்துக்காட்டி இவர் இறுமாப்பினை அடக்கிவிடுவர். ஏனெனின், ‘உயர்குலத்த வனாகிய துஷ்யந்தமன்னனுங் கண்ணுவ முனிவர் வளர்த்த சகுந்தலையுந் தாமாகவே காதலித்து மணந்து கொண்ட வரலாற்றினை அறிந்திலிரோ!' என்றும், “விழுமியோனை நளனை எழில் மிகும் அரசியான தமயந்தி பெரிதும் காதலித்துத் தானாகவே மாலைசூட்டி அவனை ன் L மணந்துகொண்ட வரலாற்றினை உணர்ந்திலிரோ!' என்றும், 'கற்பரசியாகிய சாவித்திரி சத்திய வானைக் கானகத்தே கண்டு அவன்மேற் கழிபெருங் காதல் கொண்டு அவனை மணந்த வரலாற்றினைத் தெரியீரோ!' என்றும் அவர் கடாவி இவரது சாதிச் செருக் கினை எளிதிலே களைந்தொழிப்பர். இம் மேலோர்களை யெல்லாஞ் சிறிதும் வாய்கூசாது வேசிமக்களென்னும் வகுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/176&oldid=1583806" இலிருந்து மீள்விக்கப்பட்டது