உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் 16

பிற் சேர்த்துரைத்த மறுப்புரைகாரர் புல்லுரையினை மேற் காட்டிய விழுமிய காதன் மண வரலாறுகள் வாளாய் நின்று ஈருமல்லவோ! அதுநிற்க.

இனி, அம் மறுப்புரைகாரர் இஞ்ஞான்று காதன்மணம் புரிவாரையும் வேசிமக்களென்ற வகுப்பிற் சேர்த்துக் கூறிய தமது தலைகொழுத்த உரையினை, இஞ்ஞான்று கல்வியறிவு ஒழுக்கங்களாலும் உயர்ந்த பதவிகளானும் மேல்நிலைக் கண்ணின்று காதன்மணம் புரிந்து வரும் வரும் பே மேன்மக்கள்பாற் சென்று உரைப்பராயின் அவர்,

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்"

என்னுந் தெய்வத் திருக்குறளின்படி, நலமில்லாப் பொய்யுரை பகர்ந்து எம்மை இழித்துப் பேசும் நீரே நும்பிறப்பின்கண் ஐயப்படுதற்குரியீரன்றியாமல்லேம்' என அவர் இவரது உரைக் கொழுப்பினை யுருகச்செய்வ ரன்றோ!

இனி, ஆசிரியர் சேக்கிழார் உயர்ந்த வகுப்பார்பாற் காதன் மணம் நிகழ்ந்ததெனக் கூறிற்றில ரென்றார். உயர்ந்த ஆதி சைவ அந்தண வகுப்பில் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்க் கும் பரவை நாச்சியார்க்கும் வேளாளவகுப்பிற் பிறந்த சங்கிலி நாச்சியார்க்குங் காதன்மணம் நிகழ்ந்ததனை ஆசிரியர் சேக்கிழார் தாம் அருளிச் செய்த திருத்தொண்டர் புராண முற் பிற் பகுதிகளில் நன்கெடுத்து உரையாநிற்க, அவர் அதனை உரைத்திலரென்ற அம் மறுப்புரை காரர்தங் கொடிய பொய்யு ரைக்கு அறக்கடவுளும் அஞ்சுமென்க.

அவர்

இனிக், காரைக்காலம்மையார்க்கு தஞ் சுற்றத்தாரால் மணம் பொருத்தப்பட்ட கணவன், அவர்தந் தகுதிக்கு ஒத்தவனல்லன் என்ற எமதுரையை மறுப்பான் புகுந்த அம் மறுப்புரைகாரர், கல்வியிலுஞ் சிவநேயத்திலும் அடியார் வழிபாட்டிலும் அவன் அம்மையார்க்கு முழுதும் ஒத்தவன் என்பதனையன்றோ நாட்டல் வேண்டும்? அவர் அவ்வாறு செய்தலை விடுத்துத் தமது கூற்றின் முரணை அறுக்குஞ் சேக்கிழார் செய்யுட்களையே எடுத்துக்காட்டி நெகிழ்ந்து போதலுடன் அன் அம்மையார்க்குத் தக்கான் அல்லனெனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/177&oldid=1583811" இலிருந்து மீள்விக்கப்பட்டது