உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

153

சேக்கிழார் கூறினரா? என்று விளைவுதலுஞ் செய்கின்றார். அம்மையார்க்கும் அவர்தங் கணவற்கும் உள்ள தொடர்பினை ஆசிரியர் சேக்கிழார் கூறிச்செல்லும் முறையின்படி அதனை யுணருஞ் சிறுமகாரும், அவன் அவர்க்குத் தக்க கணவனல்ல னன்பதை நர்கறிவர். அச்சிறு மகார்க்குள்ள உணர்ச்சிதானும்

ன்றி, அம் மறுப்புரைகாரர் வினாவுவராயின் அவர்க்கு அறிவு கொளுத்துதற்குரியார் அச்சிறுமகாரேயாவர். ஆசிரியர் சேக்கிழாரோ தாங் கூறிச் செல்லும் முறையில் அவன் அவர்க்குத் தக்க கணவனல்லன் என்னு முண்மையினை இனிது விளங்க வைத்தாற் போல, அவன் அவர்க்குத் தக்கானென்ப தனை யாண்டேனுங் கூறியிருக்கின்றனரா? அல்லது அம்மை யாராவது அக்கணவன்பாற் காதலன்பு பூண்டு ஒழுகினாரென விளம்பினரா? சிறிது மில்லையே. அவன் அம்மை யாரொடு தனி மனைக்கண் வைகியவழிச் செல்வத்தைப் பெருக்கினா னென்றன்றோ மொழிந்தனர். அவன் அம்மையார் மேற் காதல்கொண்டு ஒழுகினான் என்றுரையாமல்,

“தகைப்பில்பெருங் காதலினால் தங்குமனை வளம்பெருக்கி மிகப்புரியுங் கொள்கையினில் மேம்படுதல் மேவினான்'

என அவன் பொருள்மேற் காதல் வைத்து அதனைப் பெருக்குதலிற் கருத்தூன்றினான் எனக் கூறுதலை உற்று நோக்குங்கால், அவன் பொருண்மேற் காதல்கொண்டாற் போல் அம்மையார் மேற் காதல்கொண்டிலன் என்பது சிறிது அறிவுடையார்க்கும் விளங்கற்பாற்றும். அவன் பொருள்மேற் காதல்கொண்டு முனைந்து நிற்க, அம்மையாரோ சிவபிரான் திருவடிக்கட் காதல் பெருக வைகினார் என்பது போதரப்,

“பூங்குழலார் அவர்தாமும் பொருவிடையார் திருவடிக்கீழ் ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப்பெருகப்

பாங்கில்வரும் மனையறத்தின் பண்பு வழாமையிற் பயில்வார்”

என்று ஆசிரியர் கூறுதலை ஆழ்ந்து ஆராய்வார்க்கு அம்மையார் தமக்குத் தக்கவனல்லாத அக் கணவனொடு காதலால் வைகாது கடமைக்காகவே வைகி மனையறத்தைச் செவ்விதின் நடாத்திக் கொண்டு சிவபிரான் திருவடிக்கண் மட்டுமே காதலிற் பெருகினார் என்பது உணரக் கிடக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/178&oldid=1583816" இலிருந்து மீள்விக்கப்பட்டது