உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மன்றோ?

மறைமலையம் 16

இன்னும், அம்மையார் சிவனடியார்க்குத் தொண்டு செய்வதில் உறைத்து நின்றமை புலனாக,

“நம்பரடியார் அணைந்தால் நல்லதிரு வமுது அளித்தும் செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலு முதலான தம்பரிவி னாலவர்க்குத் தகுதியின் வேண்டுவகொடுத்தும் உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வு மிக ஒழுகுநாள்

என்று ஆசிரியர் சேக்கிழார் அம்மையார் திருத்தொண்டினை நன்கெடுத்து விளம்பினாற் போல, அவர் தம் கணவனும் அவரோடொத்து நின்று அடியார்க்குத் திருத்தொண்டு கூறியுள்ளாரா! எட்டுணையு

செய்தனனெனயாண்டேனுங்

மில்லையே.

அதுவேயுமன்றித்

தான் விடுத்த மாங்கனிகளின் இரண்டுள் ஒன்றை அம்மையார் அடியார்க்கு இட்டனராக, அதனை அறியாதே முன் ஒன்றனை அயின்று பின்னுமொன்று வேண்டிய போது அம்மையார் தாமதனை அடியார்க்கிட்ட வரலாற்றை அவன்பால் உரையாமல் அஞ்சினார் என்பதனை ஆராய்ந்து பார்க்குங்கால், அவன் அடியார்க்கு வேண்டுவ கொடுத்தலிற் சிறிதும் விருப்பிலான் என்பது துணியப் படுகின்ற தன்றோ? அதன்பின்னர், அவர் இறைவனருளாற் பெற்ற மாங்கனியை அவனுக்கு இட அதன் அமுதினுமிக்க சுவையை வியந்து அது வந்த வரலாற்றை அவன் வினாவிய போதும், அம்மையார் நடுக்கமுற்று அஃது இறைவனருளாற் கிடைத்த உண்மையினைத் தெரிவித்த போதும் அவன் அம்மையாரின் சிவநேயப் பேரருள் நிலையினை அறிந்திலன் என்று ஆசிரியர் சேக்கிழாரே 'ஈசனருள் எனக்கேட்ட இல்இறைவன் அது தெளியான்' என்று கூறுமாற்றானும், அவன் அம்மையாரின் உண்மை நிலையை உணர்ந்தவனல்ல னன்பதூஉம், அவனுள்ளமும் அவர் உள்ளமும் ஒருவழியே ஒன்றுபட்டு நின்றன அல்ல என்பதூஉம், அதனால் அவன் அவர்க்கேற்ற கணவனல்ல னென்பதூஉம் இனிது விளங்குகின்றன து அல்லவோ? அதன்பின்னர், அம்மையார் கூறிய உண்மையை ஆராய்வான் வேண்டி மற்றுமொரு மாங்கனி அவன் வருவித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/179&oldid=1583821" இலிருந்து மீள்விக்கப்பட்டது