உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் 16

குற்றமன்றோவெனின்; அற்றன்று முழுதும் உணரக்கூடாமைப் பற்றி ஒரு நூற்பொருளை ஆராய்ந்து பயன்பெறாதுவிட்டு மடிந்திருத்தலே குற்றமாவ தன்றி, நம்மால் இயன்றமட்டும் முயன்று அதனை யறிதல் குற்றமாகாது. திருவாசகம் என்னும் இம் மெய்ந் நூற்பொருளை அறியும் முயற்சியில் இடையிடையே நம்மை யறியாது பிழைபடுவோமாயினும் அதுகண்டு எல்லா இரக்கமும் உடைய நம் ஐயன் நமக்கு இரங்கி அருள்புரிவானே யல்லாமல் நம்மேல் வெகுள்வான் அல்லன். அப்போதுதான் நடை கற்கும் சிறு மகார் தம் தந்தையைக்கண்டு அவன்பாற் செல்லுதற்கு விழைந்து தெற்றித் தெற்றி நடந்து வருதலைப்பார்த்து அவர் தந்தை மகிழ்வனேயன்றி அவர்மேற்

சினவான்.

மக்களுள்ளும் தந்தை யாவான் இத்துணையன்பும் இரக்கமும் உடையானாயின், எல்லா வுலகிற்கும் தந்தையாய் எல்லா அருளும் இரக்கமும் உடை உடைய இறைவன் தன்னை யணுகி வழிபடும் பொருட்டு நம்போல்வார் செய்யும் முயற்சிகளின் இடையிடையே நாம் பிழைபடுதல் கண்டு நமக்கு இரங்கி அருளாது நம்மை எரிவாய் நிரயத்தில் இடுவன் என்றல் எவ்வளவு பேதைமை! திருவாசகத்தை ஓதலும் அதன்பொருளை உணர்தலும் அதற்கு உரைஎழுதலும் எதற்காக? அறிவும் அன்பும் பெற்றுப் பிறவாற்றல் உணரப்படாத முதல்வனை உணர்ந்து பிறவாற்றாற் கரையாத நெஞ்சத்தைக் கரைத்து அவனை வழிபட்டு உய்தற்கன்றே? திருவாசகத்தின் சொல்லிலும் பாருளிலும் எந்நேரமும் கருத்து ஈடுபட்டுநின்று உரை எழுதுதற்குப் பயன் எரிவாய்நிரயங் கிடைப்ப தென்றால், திருவாசகத்தைப் பொருடெரியாமற் பிழைபடஓதி எந்நேரமும் சருக்கிலும் அறியாமையிலும் உழல்வோர்க்கு எது கிடைக்கு மோ அறிகிலம்! “நரகம்புகினும், எள்ளேன் திருவருளாலே யிருக்கப்பெறின் இறைவா” என்று அடிகள் அருளியாங்கே, திருவாசகத்திற்கு உரை எழுதுதலால் நரகம் புகுவதாயின் அதுவும் திருவருளுக்கு இசைவானால் சைவானால் எமக்கும் அஃது இசைவேயாம். ஆனால், அருளே உருவாகவுடைய எம் இறைவனான சிவபெருமான் எமது இச் சிறு முயற்சியைக் கண்டு உவந்து எமக்கு அருள் வழங்குவன் என்னும் உறுதி உடையோ மாதலால் பிறர் யாதுகூறினுங் கூறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/239&oldid=1583990" இலிருந்து மீள்விக்கப்பட்டது