உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

215

அற்றேல், பண்டைநாளிலிருத்த உரையாசிரியர் எவரும் திருவாசகத்திற்கு உரையெழுதி வையாதது என்னையெனின், தமிழ அரசரும் தமிழ்ப்புலவரும் மலிந்த அந்நாளில் இலக்கண இலக்கியக் கருவி நூலுணர்ச்சியும் அறிவு நூலுணர்ச்சியும் எல்லாரும் உடையராயிருந்தமையால் திருவாசகம் முதலான அன்பு நூல்களை உணரவேண்டாமலே அவரெல்லாம் பயிலவல்லுநராயிருந்தார். மற்று இந்நாளிலோ கருவிநூல் அறிவு நூற் பயிற்சி பெரிதுங் குன்றிவிட்டமையால் திருவாசகம் முதலியவற்றிற்கு உணரவேண்டுவது இன்றியமையாததாயிற் றென்க.

கோகழி இன்னதென்பது

"கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க” என்று சிவபுராணத் தொடக்கத்துட் போந்த சொற்றொடர்க்குப் பொருள் காணுமிடத்துக் 'கோகழி' என்பதற்குத் திருப்பெருந் துறை யெனப் பொருள்கொண்டு உரை எழுதினேம். அங்ஙனம் உரை உரைக்கின்றுழி அதற்குத் ‘திருவாவடுதுறை' என்று பொருள் கூறினாரையும் மறுத்திட்டேம். இனி யாங் கூறிய பொருள் பொருந்தா தெனவும், அதற்குப் பிறர் 'திருவாவடு துறை' எனக் கூறிய பொருளே பொருந்து மெனவும் நம்மோடு ஓர் அன்பர் நட்புமுறை பிறழாமலே வழக்கிட்டனர். நட்பின் கெழுதகைமை சிதைவுறாது கடிதவாயிலாக நம்மோடு வழக்கிட்ட அந் நண்பர்க்கு யாம் நன்றி கூறுகின்றோம். அவருக்கு விடையாக யாம் எழுதியன பிறர்க்கும் பயன்படும் வண்ணம் அவற்றை ஈண்டுப் பெயர்த் தெழுதுகின்றேம்.

'கோகழி' என்பது திருவாவடுதுறையையே குறிக்கு மென்பதற்கு அந் நண்பர் முதன்மையாய்க்கொண்ட மேற்கோள் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய தேசிகரால் நூறாண்டுகட்கு முன் இயற்றப்பட்ட திருவாவடுதுறைக் கோவையேயாம். வின் வடிவாய்த் தோன்றிய உமைப்பிராட்டியார்க்கு இறைவன் அவ் ஆவின்வடிவை யொழித்து அவரை அணைத்து அருள்செய்த இடம் ஆவடுதுறை யாதலால், அது கோகழி என்னும் பெயர்த்தாயிற்று என்பதே அவர் காட்டும் முதன்மை யான காரணமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/240&oldid=1583991" இலிருந்து மீள்விக்கப்பட்டது