உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் 16

இனி ஒரு நூலுக்கு உரைகாணுமிடத்து அந் நூலாசிரியன் கருத்தறிந்து உரைகாணுதல் வேண்டும். ஒரு நூற்பொருள் துணிதற்கு அந் நூலின் கண் வந்த சொற் களையும் சொற்றொடர்களையும் பலகால் ஆய்ந்து பார்ப்ப துடன், அந் நூல் தோன்றிய காலத்தும் அதற்கு முன்னும் பின்னுமுள்ள காலத்தும் எழுதப்பட்ட நூல்களையும் கருவி களாகக் கொள்ளல் வேண்டும். அங்ஙனம் ஆயும்வழியுந் தாம் ஒரு பொருளை முன்னமைத்துக் கொண்டு அதனை அந் நூலுட் புகுத்த முயல்வது சிறிதும் ஆகாது. கூறுவோர் பெருமை சிறுமைகளால் அறிவு இழுப்புண்டு போகாமல், அவர் கூறும் பொருளின் பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து காண்பதே ஒருபக்கத்துச் சாயாது நடுநின்று உண்மை காண்டதற்கு ஏற்றதாகும். இம் முறையால் நோக்குங்காற் பண்டைக் காலத்து நூலாகிய திருவாசகத்திற் போந்த 'கோகழி' என்னுஞ் சொற்றொடர்ப் பொருடுணிதற்கு, நூறாண்டின்முன் இயற்றப்பட்ட ‘திருவாவடுதுறைக் கோவை’ யைக் கருவியாக் கோடல் பொருத்தமின்று.

பண்டை நூற் பொருள் உரைப் பொருள்களோடு பொருந்து மிடங்களிற்றாம் பின்றை நூல்கள் பொருடுணிதற் கருவிகளாக எடுக்கப்படும். திருவாவடுதுறைக்குக் ‘கோகழி’ என்னும் பெயருண்மை பண்டை நூல்களிற் காணப்படாமை யானும் அப்பர் திருஞான சம்பந்தர் முதலான நம் சமயாசிரியர் அத தலத்தின் மீதருளிச் செய்த திருப்பதிகங்களிலெல்லாம் ஆவடுதுறை யென்னும் பெயரன்றிக் கோகழி யெனும் பெயர்வரக் காணாமையானும், கோ என்னுஞ்சொல் ஆவினை உணர்த்தல் வடமொழியிலன்றித் தமிழின்கண் இன்மையின் கோகழி என்னுந் தமிழ்ச் சொற்றொடரிலுள்ள அதற்கு அவ்வாறு பொருளுரைத்தல் பொருந்தாமையானும், கோ என்னும் வடசொல்லே கழி என்னுந் தமிழ்ச் சொல் லோடியைந்து வந்ததெனின் அவ்வாறு ஒரு வடசொல்லும் ஒரு தமிழ்ச் சொல்லும் ஒட்டி ஒருசொற் போலியைந்து வருந் தொகை நிலைத்தொடர் பண்டைத் தமிழ் வழக்கின் கட் காணாமையனும் அங்ஙனம் பொருள் படுத்தல் பொருந்தா தென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/241&oldid=1583994" இலிருந்து மீள்விக்கப்பட்டது