உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

217

இனி அடிகள் திருப்பெருந் துறையில் அருளிச் செய்கின்ற 'சிவபுராணத்' துவக்கத்திலேயே திருவாவடு துறையைக் கூறுதற்கு ஓரியையும் இன்றென்பதூஉம் ஒரு சிறிது காட்டுவாம். திருவாதவூரடிகள் வரலாற்றில் இயைபுற்று நிற்குஞ் சிவதலங்கள்; திருப்பெருந்துறை, மதுரை, திருவுத் தரகோச மங்கை, தில்லை, திருக்கழுக்குன்றம் என்பனவாம். அடிகள் முதன் முதல் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தலம் பெருந்துறையே யாதலானும், பின்னர்த் தமது தவம் நிறை வேறிய தலம் உத்தரகோச மங்கையே யாதலானும் அவ்விரண் டையும், இறைவன் தம்மைத் ‘தில்லைப்பொதுவின் கண் வருக' அருளி மறைந்தமையின் அச் சிறப்புப் பற்றித் தில்லையினையும் ஏனையவற்றின் மிக்கெடுத்துப் பாடி அடுத்தடுத்துத் திருப்பதியங்கள் கட்டளையிட்டருளுகின்றார். இவை தமக்கு அடுத்தபடியாய் வைத்து மதுரை, கழுக்குன்றம் என்னும் இரண்டனையும் பாடியிருக்கின்றார்.

வன

ஏனைத்தலங்களைக் கூறும் வழி அவற்றை ஒருசேரத் தொகுத்தும், சிலவற்றிற்குத் தனிப்பதிகங்கள் வகுத்தும் அருளிச் செய்திருக்கின்றார். இங்ஙனம் அருளிச் செய்தவற்றுள் ஆவடுதுறை யென்னும் பெயராவது, அல்ல தத்தலத்தைப் பற்றிய குறிப்புச் சிறப்புக்களாவது சிறிதும் வரக்கண்டிலேம். மேலும், ஆவடுதுறை என்னுந் தலம் அடிகள் வரலாற்றில் இயைபுறுதலுங் கண்டிலேம். இங்ஙனமாக, அடிகள் திருப்பெருந்துறையில் அருளிச் செய்கின்ற சிவபுராணத் துவக்கத்திலேயே திருவாவடுதுறையை எடுத்தோதினரெனக் கொண்டு 'கோகழி' என்னுஞ் சொற்றெடர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் தினைத் துணையும் பொருந்தாதென்க. அங்ஙனம் அதனை முதற்கட் சிறந்தெடுத்துக் கூறுதற்குச் சிறந்ததோரியைபு காட்டல் வேண்டுமன்றே. அது தெய்வத் தன்மை பொருந்திய தலமாதல் கண்டு அங்ஙனம் விதந்து கூறினாரெனின், அதனினுந் தெய்வத் தன்மை வாய்ந்த தில்லை, மதுரை, திருவாரூர் முதலிய தலங்களெல்லாம் உளவாக அவற்றையெல்லாம் விடுத்து ஆவடு துறையைக் கூறினா ரென்றல் சிறிதும் ஏலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/242&oldid=1583995" இலிருந்து மீள்விக்கப்பட்டது