உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

❖ LDM MLDMELD -16 →

மேலும், முதற்கட் "கோழி யாண்ட குருமணி" குருமணி” என்று விதந்து கூறியவாறு போலவே, “கோகழி மேவிய கோவே போற்றி" எனவும், “கோகழி நாதனைக் கூவாய்” எனவும், "கடையேனைத் தொண்டாகக் கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு" எனவும், "நம்மிடர்கள் போயகல எண்ணியெழு கோகழிக்கரசை” எனவும் அதனைப் பிறாண்டும் பலவிடத்தும் அடிகள் விதந்து கூறுமாறும், பெருந்துறையைப் பற்றிய பதிகங்களிலேயே 'கோகழி' என்னும் அச் சொற்றொடர் பெரும்பாலுங் காணப்படுமாறும் உற்றுநோக்க வல்லார்க்கு அது பெருந்துறைக்கே பழையதொரு பெயராமென்பது தெற்றென விளங்கா நிற்கும்.

“திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின்”.

னி, மாணிக்கவாசகப் பெருமான் ‘கோகழி' என்னு சொற்றொடரைத் திருப்பெருந்துறைக்கே பெயராகக் கூறியருளி னாரென்பதற்கு, அவர் திருச்சிற்றம்பலக் கோவையாரில் “சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமி" என்பதன்கண் ‘வான்கழி' என்னும் அப் பெயரை எடுத்து ஓதுதலே சான்றாம். 'வான்கழி' ‘கோகழி' என்பன ‘பெரியகழி' என்னும் பொருளையே தராநிற்கும். இதற்கு உரைகண்ட பேராசிரியரும் “வான்கழி” என்பதற்குச் 'சிவலோகம்' எனினும் அமையும்' என்று பொருளுரைத் தமையுங் காண்க. சிவபுரம் சிவலோகம் என்பனவுந் திருப்பெருந்துறைக்கே உரிய பெயர்களாம். இது, “தென்பெருந்துறையாய் சிவபெருமானே சீருடைச் சிவபுரத்தரசே” எனவும், “தென்பராய்த் துறையாய் சிவலோகா திருப்பெருந் துறை மேவிய சிவனே" எனவும் அடிகளே ஆண்டாண்டுக் கூறுமாற்றால் தெளியப்படும். அற்றன்று, தேவர்கள் உறையும் வானுலகங்ளெல்லாங் கழிந்ததற்கு மேல் உளதாகிய கைலாயத்தினையை சிவலோகம் எனப் பேராசிரியர் கருதினாரென்று கொள்ளாமோவெனிற், கொள்ளாமன்றே, என்னை? வான்கழிந்த வான்கழிந்த இடத்திற்கு டத்திற்கு ‘வான்கழி” என்னும் பெயருண்மை யாண்டுங் காணப்படாமையானும், அது பரும்பாலும் நெய்தல் நிலத்துள்ள ஒருவகை நீர்நிலையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/243&oldid=1583996" இலிருந்து மீள்விக்கப்பட்டது