உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கருத்தோவியம்

219

னையே சுட்டுமென்பதற்குக் “கானல் முரம்பு கழியின் பெயரே” ‘அதோமுகம் புகாரோடருவி கூடல், கழிமுக மென்று கருதல்வேண்டும்" “காயலும் முகமுங் கழியெனப்படுமே என்னுந் திவாகர பிங்கலந்தைச் சூத்திரங்களே சான்றாகலானும் ங்ஙனமே உலகவழக்கினும் அச்சொல் நெய்தல் நிலத்து நீர்நிலைக்கே பெயராய் வழங்கக்காண்டலானும், ‘சங்கந்தரு முத்தி' என்னுஞ் செய்யுள் கடலுக்குஞ் சிவபெருமானுக்கும் சிலேடை வகையால் இருபொருள் பயக்குமாறு தலைமகள் தோழியை நோக்கிக்கூறுகின்றாளாக அடிகள் கூறுகின்றுழி அவர் தம்மைத் தலைமகளோ டொன்று படுத்திப் பெருந்துறையில் நேரே கட்புலனாய்க் குருவடிவில் எழுந்தருளித் தம்மையாண்ட இறைவனது அருட்டிறத்தை வியந்துருகியுரைப் பரல்லது புலனாகாது கைலாயத்திலமர்த் நிலையைக் கருதிக் கூறாராகலானும், கடற்பாங்கில்நின்று கடலை நினைந்து கூறுவார்போற் கூறுமவர்க்கு அதனையடுத்துள்ள பெருந்துறையில் இறைவன் எழுந்தருளிய திறத்தினையுங் கூறுதற்கே நினைவு செல்லு மல்லது பிறிது ஆகாதென்பது மனவியல்பு தேர்வார்க்கு இனிது விளங்கு மாகலானுமென்பது.

இனிக், கழி என்னுஞ் சொல்லுக்குத் துறை என்னும் பொருள் நேரே பெறப்படாதாயினும் ஆகுபெயரால் அது பெறப்படு மென்பதனைச் சிறிது காட்டுவாம். சொற்கள் உணர்த்தும் பொருள் செம்பொருளெனவும் ஆக்கப்பொரு ளெனவும் இருவகைத்து. செம்பொருளாவது ஒரு சொல்லுக்கு இயற்கையாய் உள்ளபொருள்; ஆக்கப்பொருளாவது ஒரு சொற்கு இயற்கைப்பொருள் ஒழிய அதனோடு இயைபுடைய பிறிதொன்றாம். 'தாமரை' என்னுஞ் சொல் வேர் தண்டு இலை பூ முதலான உறுப்புக்கள் முழுதுங்கூடிய ஒரு பூண்டினை உணர்த்துங்கால் அஃது அதற்கு இயற்கையான செம்பொரு ளாகும். 'தாமரை மலர்ந்தது' என்னுஞ் சொற்றொடரில் அச்சொல் அப் பூண்டு முழுமையும் உணர்த்தாமல் அதனோடு

இயைபுடைய அதன் ஓர் உறுப்பாய மலரைமட்டும்

உணர்த்துதலால் அஃது அதற்கு ஓர்ஆக்கப்பொருளாகும். இம் முறையால் நோக்குமிடத்துக் ‘கழி’ என்னுஞ்சொல் அகன்ற தொரு நீர்ப்பரப்பினையே இயற்கையாய் உணர்த்துமாயினும்,

ஒரோ வொருகால் அது தன்கண் ஒருபகுதியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/244&oldid=1583997" இலிருந்து மீள்விக்கப்பட்டது