உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

என்னும்

மறைமலையம் 16

நீர்த்துறையினை உணர்த்துதற்கும் உரிமையுடைத்தாம். ஆகவே, 'கோகழி’ பயர் 'பெருந்துறை’ எனப் பொருள்படுதற்கும் ஏற்புடைத்தாதல் காண்க. ‘கழி’ ‘துறை’ எனுஞ் சொற்கள் நெய்தல் நிலத்து நீர்நிலையைக் குறிக்கும் பெயர்களாய் வழங்கப்படுதலைப் 'பொங்குகழி நெய்தல் உறைப்ப இத்துறை’ (186), “இருங்கழி மருங்கின் அபிரை யாருந், தண்ணந்துறைவன்” (164), “கானலம் பெருந்துறைக் கலிதிரை திளக்கும்” (199), “அலவன்றாக்கத் துறையிறாப் பிறழும்” (179), என்றற்றொடக்கத்து ஐங்குறு நூற்றுத் தொடர்மொழிகளிலும், "போஓய வண்டினாற் புல்லென்ற துறையவாய்” (17) என்னுங் கலித்தொகைச் சொற்றொடரிலுங் கண்டுகொள்க.

னி

இனி இப்போது கடல் திருப்பெருந்துறையைவிட்டு நெடுந் தொலைவு அகன்று போயதேனும் நம் மாணிக்க வாசகப் பெருமான் இருந்த ஆயிரத்து அறுநூறு ஆண்டு களுக்கு முன் அஃது அவ்வூர்க்கு அருகில் இருந்ததென்பதூஉம், அவர் காலத்துக்கும் முன்னே அஃது அவ்வூர்க்கு மிகவும் அணித்தாய் இருந்த தென்பதூஉம், அவ்வாறு திருப்பெருந் துறை பண்டை நாளிற் கடற்கரையின் மருங்கே பெரியதோர் உப்பங்கழியை அடுத்திருந்தமை பற்றியே அது ‘கோகழி' எனவும் சிறிது பிற்காலத்தே அப்பொருளே படும் ‘பெருந் துறை' எனவும் பெயர் பெறலாயிற்றென்பதூஉம் சிறிது காட்டுதும். மாணிக்கவாசகப் பெருமான் பாண்டிய மன்ன னிடத்து அமைச்சராயிருந்த ஞான்று ஒருநாள் தூதவர் சிலர் அவ்வரசன் அவைக்களத்தே போந்து 'சோழநாட்டுக் கடற் கரையிலே ஆரியர் குதிரைகள் கொண்டு வந்து விலை செய்தற்கு இறங்கியிருக்கின்றனர், யாம் அதனைக் கண்டேம்' என்று தொழுதுரைக்க, அது கேட்ட அவ்வரசன் தன் அமைச்சராகிய மாணிக்கவாசகரை நோக்கி ‘நமக்குச் சிறந்த குதிரைகள் வேண்டியிருத்தலின் இப் பெரும் பொருள் காண்டு பெருந்துறைக்குச் சென்று அவற்றை விலை காண்டு திரும்புமின்! என்று கூறி அவர் கையிற் பெரும் பொருள் கொடுத்து விடுத்தனன் எனத் திருவாதவூரடிகள் புராணம் புகலாநிற்கின்றது; அது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/245&oldid=1583998" இலிருந்து மீள்விக்கப்பட்டது