உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

“தாதகி மார்பன் நெடும்புவி சார்தரும் ஆழ்கடலின் கரை தீதிலா மாதுரகங் கொடு சீர்கெழும் ஆரியர் வந்தனர்

ஏதம் இலாய் அது கண்டனம் யாம் எனவே! தொழு தன்பொடு மேதினி காவலன் முன்சில மேதகு தூதர் விளம்பினர்"

எனவும்,

“மெய்த்தவர் உற்ற பெருந்துறை வித்தகரைக் குறுகும்படி

இத்தகு ஈற்பொருள் கொண்டு நீர் இப்படியிற் செலும் என்றவின் அத்தகு புத்தி யொழிந்துயிர் அற்புத முத்தி பெறும்படி

221

உய்த்துள சக்தி யுடன் பொரு வொத்தனன் உத்தம பஞ்சவன்' எனவும் மந்திரிச்சருக்கத்தட் போந்த அதன் செய்யுட்களிற் காண்க.

இவ்வாறு பாண்டியன் பெருந்துறைக்குச் சென்று குதிரை கொண்டு வருகவென அடிகளை ஏவினமை திருவாதவூரடிகள் புராணத்தால் இனிது விளங்குதலின், அப் பண்டைக் காலத்திற் றிருப்பெருந்துறை கீழ்கடற் கரைக்கு அணித்தாயிருந்த தென்பது தெற்றென விளங்காநிற்கும். இஞ்ஞான்றுந் திருப்பெருந்துறை கடலுக்கு மிகச் சேய்த்தாய் இல்லை. திருப்பெருந்துறைக்குக் கிழக்குப் பக்கமாய்ப் பதினான்கு மைலிலும், தெற்குப் பக்க மாய்ப் பதினைந்து மைலிலும் கடல் உள்ளதென அறிகின் றோம்.' இப்போதே இஃது இத்துணை அண்மையில் உள தாயின், ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்குமுன் இன்னும் இது கடலுக்கு எவ்வளவு அணித்தாயிருந்தாதல் வேண்டு மென்ப தனை யாங் கூறுதல் வேண்டாம். சில நிலப் பகுதிகளிற் கடல் வர வர அகன்று போதலும், வேறு சிலவற்றில் அது வர வர அணுகியேறு தலும் நில நூல்வல்லார் நன்கு விளக்கிக் காட்டுவர். அதனால், திருப்பெருந்துறை பண்டைநாளிற் கடற்கரையை அடுத்திருந்ததெனும் உண்மை மறுக்கப்பட மாட்டாதென்க.

இன்னுந், திருப்பெருந்துறை முன்னை நாளில் நெய்தனிலத்துக் கழியைச் சார்ந்திருந்தமை பற்றியே 'கோகழி' எனப் பெயர் பெறலாயிற்றென்பதற்கு வேறுமொரு சான்றுங் காட்டுவாம். திருப்பெருந்துறையும் அதனை யடுத்துள்ள ஊர்களும் பண்டை நாளில் ‘மிழலைக் கூற்றத்’தில் உள்ளன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/246&oldid=1583999" இலிருந்து மீள்விக்கப்பட்டது